காவிரியில் நீர் இல்லையா? பொங்கிய அர்ஜூன் சம்பத்.. தமிழகத்தில் இன்று இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகம்-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து இன்று அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே மீண்டும் காவிரி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து அம்மாநில அரசு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அரசு சரியாக தண்ணீர் திறப்பது இல்லை. இந்த ஆண்டும் கூட தமிழகத்துக்கு திறக்க வேண்டிய உரிய நீரை கர்நாடகா அரசு தரவில்லை. குறைந்த அளவில் மட்டுமே தண்ணீரை திறந்து வருகிறது. கேட்டால் கர்நாடகாவில் மழை இல்லை. கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என கூறுகிறது.
இருப்பினும் கூட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா அரசு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து வருகிறது. இதற்கிடையே தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் தொடர்ந்து பந்த் போராட்டம், கர்நாடகா-தமிழக எல்லை முற்றுகை, கேஆர்எஸ் அணை முற்றுகை போராட்டங்களை கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் நடத்தினர்.
அதேபோல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் பல அமைப்பினர் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தை நடத்தி உள்ளன. அந்த வரிசையில் தான் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், தண்ணீர் தராமல் இருக்கும் கர்நாடகா அரசை கண்டிக்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் என்ற வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து பிரசார பாடம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications