ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: எஸ்.ஆர்.சேகரிடம் 7.30 மணி நேரமாக துருவித் துருவி விசாரித்த சிபிசிஐடி!
சென்னை: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று காலை ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் துருவித் துருவி சுமார் ஏழரை மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். கோவையில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.
இதையடுத்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், தான் ஏற்கனவே கோவையில் சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும், தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது வியாழக்கிழமை அதாவது இன்று எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் அவரது செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று, ஐகோர்ட் உத்தரவின்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 7.30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications