பரங்கிமலை கொலை.. சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டது எப்படி? என்ன நடந்தது? சிபிசிஐடி விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ம் தேதி மாணவி சத்யா கொலை செய்யப்பட்டார். .இந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கி உள்ளது. ஒரு தலை காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறி சத்யாவை சதீஷ் கொன்றுள்ளார்.

CBCID starts the investigation into Sathyas murder by Sathish in St.Thomas Mount station

சத்யாவின் அப்பா மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். சதீஷின் அப்பா தயாளன் முன்னாள் எஸ்.ஐ. இவர்கள் ஆதம்பாக்கம் இருவரும் போலீஸ் குடியிருப்பில்தான் வசித்து வந்துள்ளனர். போலீஸ் குடியிருப்பில் சத்யாவை பார்த்த சதீஷ் பல வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார். ஒரே குடியிருப்பு என்பதால் இவர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சத்யாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு தலைக் காதல் என்பது ஒரு கட்டத்தில் டார்ச்சராக மாறி உள்ளது. கல்லூரிக்கு தனியாக செல்லும் போது, திரும்பி வரும் போதெல்லாம் காதலை சொல்லி இருக்கிறார். இந்த ஒருதலைக் காதல் காரணமாக மது உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு சதீஷ் ஆளாகி இருக்கிறார்.

இந்த விஷயம் இரண்டு குடும்பங்களுக்கும் தெரிந்து பிரச்சனை ஆனது.இந்த நிலையில்தான் சத்யா காதலை ஏற்றுக்கொள்ளாத கோபத்தில் நேற்று சதீஷ் அவரை கொலை செய்தார் மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு சத்யாவை சதீஷ் என்று இளைஞர் கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

CBCID starts the investigation into Sathyas murder by Sathish in St.Thomas Mount station

சதீஷ் அங்கிருந்து ஓடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு சதீஷ் சென்ற இடங்கள், அவரின் நண்பர் வீடுகள், அவரின் போன் சிக்னல் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. தொடர் தேடுதலுக்கு போன் கடந்த வியாழக்கிழமை இரவு சதீஷ் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சத்யாவின் தந்தை மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு காரணமாக பலியானதாக கூறப்பட்டது. அதன்பின்தான் சத்யா மரணத்தால் அவரின் தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா் என்ற உண்மை தெரிய வந்தது.

இந்த சம்பவம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றதால் ரயில்வே போலீசார் வழக்கை விசாரித்து வந்தனர். வழக்கை ரயில்வே போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை வழக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று இரவு வழக்கை சிபிசிஐடி போலீசார் அதிகாரபூர்வமாக விசாரணைக்கு எடுத்தனர்

இந்த வழக்கிற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா்கள் ஜியா உல் ஹக் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது.

CBCID starts the investigation into Sathyas murder by Sathish in St.Thomas Mount station

துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் செல்வக்குமாா், புருஷோத்தமன், ஆய்வாளா் ரம்யா ஆகியோர் விசாரணை குழுவில் இடம்பெற்று உள்ளனர்.

சத்யா கொலை செய்யப்பட்ட நடைமேடைக்கு பக்கத்து நடைமேடை சிசிடிவி, வெளியே இருந்த சிசிடிவி, நேரடி சாட்சியங்கள் ஆகியோரின் ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+