சிபிஐ கைக்கு போன முக்கியமான அந்த ஃபைல்.. எல்லாமே வில்லங்கமான விசயங்கள்! சிக்கலில் பொன் மாணிக்கவேல்?
சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான முக்கியமான சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ரெய்டில் கிடைத்த பல ஆவணங்களை எடுத்துச் சென்ற சி.பி.ஐ, அதனை ஆராய்ந்த போது பல வில்லங்கமான விசயங்கள் கிடைத்துள்ளதாம்
தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் மூன்று நாட்களுக்கும் முன்பு அதிரடி சோதனை நடத்தியது சி.பி.ஐ. இதே பிரிவின் டி.எஸ்.பி. யாக பணிபுரிந்த காதர்பாஷா மீது, தனது பணி காலத்தில், சிலையை கடத்தி விற்றதாக குற்றம் சாட்டி அவரை கைது செய்துருந்தார் பொன் .மாணிக்கவேல். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் காதர்பாஷா வழக்குத் தொடர்ந்தார். விசாரணை நடந்து வந்தது.

ஒரு கட்டத்தில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில் தான் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக ரெய்டு நடத்தியது சி.பி.ஐ.. அந்த ரெய்டில் கிடைத்த பல ஆவணங்களை எடுத்துச் சென்ற சி.பி.ஐ, அதனை ஆராய்ந்த போது பல வில்லங்கமான விசயங்கள் கிடைத்துள்ளதாம். அது குறித்து விசாரிப்பதற்காக பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. தரப்பில் ஆலோசிக்கப் பட்டுள்ளது.
விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாக ஐ.பி.எஸ். வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. சி.பி.ஐ.யின் விசாரணைக்கு பொன் மாணிக்கவேல் ஆஜராகும் போது இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகும் என்கிறார்கள்
தகவல்; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொன். மாணிக்கவேல் பணியில் இருந்தபோதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காதர்பாட்ஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குற்றம் நடந்ததாக குறிப்பிட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கில் கிளைமேக்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications