அஜித் குமார் வழக்கில்.. பிரஷர் போட்ட "புள்ளி" யார்? சிபிஐ கையில் எடுக்கும் முக்கிய விவகாரம்? பின்னணி
சென்னை: இளைஞர் அஜித் குமாரின் கஸ்டடி மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அஜித் குமாரின் இந்த மரண வழக்கில் இரண்டு விதமான விசாரணைகளை சிபிஐ மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்புவனம் காவல் மரண வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இந்த வழக்கின் விசாரணை சரியாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அப்போது, அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக அரசின் இந்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழை (NOC) தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவே இந்த வழக்கு சிபிஐக்கு உடனடியாக மாற்றப்பட்டது. அஜித் குமாரின் இந்த மரண வழக்கில் இரண்டு விதமான விசாரணைகளை சிபிஐ மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 விதமான விசாரணை
போலீசார் மேற்கொண்ட விசாரணை, வீடியோ ஆதாரங்கள், போலீசார் செய்த கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் ஆய்வு செய்யப்படும். விசாரணை முடிவில் போலீசாருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு வலுவாக்கப்படும். முக்கியமாக இதில் சிசிடிவி ஆதாரங்கள் போலீஸ் மீதான குற்றத்தை உறுதி செய்யும். சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்படும்.
இரண்டாவதாக.. அந்த இளைஞர் அஜித் குமாரை கொலை செய்யும் அளவிற்கு போலீசாருக்கு பிரஷர் கொடுத்தது யார் என்ற விசாரணை விரைவில் தொடங்கப்படும். சிபிஐ பெரும்பாலும் அந்த பின்னால் உள்ள புள்ளியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தும் என்று கூறப்படுகிறது. காவல் துறையினர் ஏன் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் தனி இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்?
யார் அழுத்தத்தின் பெயரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 30 கி.மீ தொலைவில் இருந்து சீருடை அணியாமல் போலீஸ் ஏன் விசாரணைக்கு வந்தது? ஒரு திருட்டு வழக்கிற்கு இவ்வளவு தூரம் போலீஸ் வந்தது எப்படி? இதில் அடிபடும் ஐஏஎஸ் அதிகாரி யார்? என்றெல்லாம் கேள்விகள் தீவிரமாக உலவி வருகின்றன.
இதைதான் சிபிஐ தீவிரமாக விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தரப்பே இதில் முன்வந்து வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்ளது. இதனால் இப்போது சிபிஐ பக்கம் பால் சென்றுள்ளது.. இதை இப்படி சிபிஐ கையாள போகிறது என்பதுதான் இதில் மிகப்பெரிய கேள்வி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications