நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு.. 44 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்
சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 10 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 2.6 கோடி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது இன்று முதல் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. 12 ஆம் வகுப்பை பொறுத்தவரை இன்று தொடங்கும் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று தொடங்கும் தேர்வானது காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் 10 மணிக்கு முன்பாக வந்துவிட வேண்டும் என்றும், அதற்கு பின்னர் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications