ஓலா நிறுவனத்துக்கு “செக்” வைத்த மத்திய அரசு.. அது என்ன “கூப்பன்”? ரீ-ஃபண்ட் பாலிசியை மாத்துங்க!
சென்னை: முன்னணி ஆன்லைன் டாக்சி புக்கிங் செயலியான ஓலாவுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓலா தளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் அனைத்து சவாரிகளுக்கும் நுகர்வோருக்கு ரசீது அல்லது இன்வாய்ஸ் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆப்கள், கார், ஆட்டோ, பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள், கார், ஆட்டோ உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரே தளத்தில் தங்களுக்கு அருகில் இருக்கும் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள பயணிகளுக்கு உதவுகின்றன. நாடு முழுவதும் பல நகரங்களில் இந்த ஆன்லைன் கேப் செயலிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களின் வாகன சேவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த தளங்களில் சமீபமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், டிரைவர்களுக்கு உரிய பணம் போய்ச் சேரவில்லை என்றும் புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் டாக்ஸி புக்கிங் சேவை நிறுவனமான ஓலாவுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வாடிக்கையாளர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டுமா அல்லது கூப்பன் வழியாக ரீ ஃபண்ட் பெற வேண்டுமா என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கும் வழிமுறையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஓலா தளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ சவாரிகளுக்கும் நுகர்வோருக்கு பில் அல்லது ரசீது அல்லது இன்வாய்ஸ் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓலா ஆப்பில் அட்வான்ஸாக செலுத்திய பணத்தை, ஒருவேளை சவாரியை கேன்சல் செய்து திரும்பப் பெறும்போது, கூப்பன் வவுச்சரை மட்டுமே ஓலா நிறுவனம் வழங்கி வந்தது. இது வங்கிக் கணக்கு மூலம் பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது கூப்பனைத் தேர்வு செய்தல் என நுகர்வோருக்கு தெளிவான ஆப்ஷன்களை வழங்கவில்லை. கூப்பன்களை அடுத்த சவாரிக்கு பயன்படுத்தலாம் என்றாலும் இது நுகர்வோர் உரிமைகளை மீறுவதாகும் என்று நிதி கரை தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் குறிப்பட்டுள்ளது.
மேலும், ஓலாவில் முன்பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சவாரிகளுக்கான கட்டணப் பட்டியலை வாடிக்கையாளர்கள் அணுக முயற்சித்தால், "ஓலாவின் ஆட்டோ சேவை நிபந்தனைகளில் மாற்றங்கள் காரணமாக ஆட்டோ பயணங்களுக்கான வாடிக்கையாளர் கட்டணப்பட்டியல் வழங்கப்படாது" என்ற தகவல் செயலியில் காட்டப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான பில் அல்லது விலை விவரப் பட்டியல் அல்லது ரசீது வழங்காமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் 'நியாயமற்ற வர்த்தக நடைமுறை' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலையீடு காரணமாக ஓலா செயலியில் நுகர்வோரை மையமாகக் கொண்ட சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஓலாவின் குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் நோடல் அதிகாரி பற்றிய விவரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை. இப்போது, குறைதீர்ப்பு அதிகாரி மற்றும் நோடல் அதிகாரியின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை வலைத்தளத்தின் "சப்போர்ட்" பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கேன்சல் பாலிசியின்படி ரத்து செய்ய அனுமதிக்கப்பட்ட நேரம், இப்போது பயணத்தை முன்பதிவு செய்யும் நேரத்தில் தெளிவாகக் காட்டப்படும். ரத்து செய்தல் கட்டணத் தொகையின் அளவு இப்போது சவாரி முன்பதிவு பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் நுகர்வோர் ரத்து செய்வதற்கு முன் சவாரியை ரத்து செய்வதால் வசூலிக்கப்படும் தொகையை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். பிக்கப் மற்றும் டிராப் இடங்கள் இரண்டின் முகவரியும் ஓட்டுநர்களுக்குக் காண்பிக்கப்படும் வகையில் ஓட்டுனர்களுக்காக புதிய திரை சேர்க்கப்பட்டுள்ளது.
சிரமங்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, நுகர்வோர் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் கூடுதல் காரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேமெண்ட்டை ஊக்குவிக்கவும், ஏசியை இயக்கவும் ஓட்டுநர்களுக்கு தகவல்தொடர்புகள் வழங்கப்படுகின்றன. ஓட்டுநர்களுக்கு பணம் வழங்கப்படும் 'பேமெண்ட் சைக்கிள்' திருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவாக பணம் பெறுவார்கள். தேசிய நுகர்வோர் உதவி எண் தகவலின்படி, கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 9, 2024 வரை மட்டும் 10 மாதங்களில் ஓலா மீது மொத்தம் 2,061 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications