சென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி
சென்னை: சென்னை- அரக்கோணம் தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் என்ஜினில் சோதனை முறையில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முறையே என்ஜின் முகப்பிலும், பக்கவாட்டிலும், ஓட்டுனர் கேபினில் இந்த கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்களை வெகுவாக குறைக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. இந்த பரிசாத்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என தெரிகிறது.
சென்னையில் 670 மின்சார ரெயில் சேவைகள் அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம், திருமால்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. பல லட்சம் பயணிகள் தினமும் இந்த மின்சார ரயில்களில் சென்று வருகிறார்கள். மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளங்களில் பொதுமக்கள்சிக்கி உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் பரிசாத்தமான முயற்சியை செயல்படுத்தி உள்ளது

இதன்படி சென்னை- அரக்கோணம் தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் என்ஜினில் சோதனை முறையில் 3 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. முறையே என்ஜின் முகப்பிலும், பக்கவாட்டிலும், ஓட்டுனர் கேபினில் இந்த கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. என்ஜின் முகப்பில்
உள்ள கேமிரா மூலம் தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும். பக்கவாட்டில் உள்ள கேமிரா மூலம் ரெயிலின் பின் பகுதி வரையிலும் படிகளில் யாராவது பயணம் செய்கிறார்களா? என்பதை பார்க்க முடியும். ஓட்டுனர் கேபினில் உள்ள கேமிரா மூலம் அவர்கள் சரியான முறையில் ரெயிலை இயக்குகின்றனரா? என்பதையும் இனி கண்காணிக்க முடியும்.
இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களை எளிதாக கண்டறிய முடியும். அத்தோடு விபத்து நிகழாமல் தடுக்க முடியும். விபத்துக்கு பொதுமக்கள் காரணமாக அல்லது ரயில் ஓட்டுநரின் அஜாக்கிரதையா என்பதையும் கண்டுபிடிக்க முடியும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து மின்சார ரயில்களிலும் கேமரா பொருத்தப்பட உள்ளது.
ஏற்கனவே தண்டவாளத்தில் விரிசல், ரெயில்கள் சிவப்பு சிக்னலை கடந்து செல்வது, தடம் புரள்வது, இயற்கை பேரிடர் போன்ற விபத்துக்கக்கான காரணங்களை துள்ளியமாக கண்டறிய சில விரைவு ரெயில்களின் என்ஜினில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications