ஜனநாயகனுக்கு கடிவாளம்.. ED, CBI, IT வரிசையில் இப்போ சென்சார் போர்டு! விளாசிய காங்கிரஸ் எம்பி! பரபர!
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், விஜயின் பெயரைக் குறிப்பிடாமல், சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை என 'ஜனநாயகனுக்கு' ஆதரவு குரல் கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர்.
சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது எனவும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜய், கடைசித் திரைப்படமாக அறிவித்துள்ள படம் தான் 'ஜனநாயகன்'. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் உடன், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைக்க படத்தின் 4 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜனநாயகன் படம்
இந்நிலையில் ஜனநாயகன் படம் வெளியாவது தள்ளிப் போயுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவித்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கேவிஎன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று (புதன்கிழமை) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி, ஜனவரி 9ஆம் தேதி 'ஜனநாயகன்' வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்சார் போர்டு சர்ச்சை
இந்நிலையில், சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது எனவும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஆர்எஸ்எஸ் பிரச்சாரத் திரைப்படங்கள் பூஜ்ய ஈர்ப்பு, பூஜ்ய நம்பகத்தன்மை கொண்டது. இதுபோன்ற படங்கள் பொதுமக்களின் ஆர்வத்தை பெறாத போது, மோடி-ஷா ஆட்சி நம்பிக்கையுடன் இல்லாமல், கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

மாணிக்கம் தாகூர்
இப்போது அவர்களின் கட்டுப்பாடுகள் திரைப்படத் துறையை நோக்கி நீண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிது. ஆனால் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த உரிமை சட்டத்தை பயம் கட்ட்ட பயன்படுத்துவதால், இந்த சட்டமே பலவீனப்படுத்தப்படுகிறது.
கருத்து சுதந்திரம்
ED, CBI, IT போன்றவை மோடி-ஷா எதிர்ப்பை அடக்குவதற்கான முன்னணி கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்போது தணிக்கை வாரியமே சினிமா மற்றும் கருத்துகளை கட்டுப்படுத்தும் ஆயுதமாக்க மாற்றப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அமைப்புகள் அச்சுறுத்தலின் கருவிகளாகக் மாற்றப்பட்டுள்ளன. அதேநேரம் பாஜக-ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் "கலாச்சாரம்" என்று திணிக்கப்படுகிறது.சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு தேவை. கலை அதிகாரத்தின் முன் மண்டியிட வற்புறுத்தப்படும் போது ஜனநாயகம் தப்பிப் பிழைக்க முடியாது." என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து அரசியலிலும், சினிமாவிலும் கவனத்தை பெற்று வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications