Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்.முருகன் சொன்ன மேட்டர்.. அதிரடி முடிவுக்கு தயாராகும் ‘ஜனநாயகன்’ டீம்.. வழக்கு வாபஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஜனநாயகன் (Jana nayagan) பட தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு சென்சார் போர்டையே நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல், மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக வழக்கு தொடர்ந்தது.

Censor Timeline Reduced to 18 Days Jana Nayagan Producers to Withdraw Court Case

ஜனநாயகன் சென்சார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா, படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

மீண்டும் விசாரணை

அதைத்தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது.

சென்சார் சான்றிதழ் தொடர்பான தனி நீதிபதி பி.டி ஆஷா உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி போதுமான அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை தனி நீதிபதி முன் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்சார் மறுஆய்வுக் குழுவிடம் பரிந்துரைக்க ஒப்புக்கொண்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும் படத் தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. சென்சார் போர்டும் இதுவரை இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

எல்.முருகன் சொன்ன தகவல்

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், திரைப்பட சென்சார் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாள்களாக குறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறும்படங்களுக்கு 3 நாள்களுக்குள் சென்சார் சான்று வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் கீழ், செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது.

இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை மீறும் வகையிலோ, அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்றவை இடம் பெற்றாலோ மட்டுமே காட்சிகளை நீக்குவதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 71,963 திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. திரைப்பட சென்சார் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் டீம் திட்டம்

தற்போது ஒரு திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க 28 - 48 நாட்கள் வரை ஆகிறது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்சார் சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதால், விஜய்யின் 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு சென்சார் போர்டை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், கிட்டத்தட்ட 1 மாதம் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தான், நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, சென்சார் போர்டை அணுகி, தணிக்கைச் சான்றிதழ் பெற கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+