பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி.. என்னென்ன சான்றிதழ் வாங்கலாம்?
சென்னை: பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வருகிற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் வாக்காளர் அடையாள அட்டை பெற பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1969 இல் இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், சரியாக 54 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது அனைத்து விதமான அரசு சார்ந்த விஷயங்களுக்கு பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா லோக்சபாவில் மத்திய அரசால் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபரின், பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். எனவே, அக்டோபர் 1 முதல் கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிறப்பு சான்றிதழை ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
பிறப்பு மற்றும் இறப்பு டேட்டாக்களை மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளை அரசின் சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது மக்கள் தொகைப் பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், சொத்துப் பதிவு உள்ளிட்டவற்றிற்கு அரசுகள் பயன்படுத்த முடியும். மேலும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், வாடகைத்தாய் குழந்தைகள், சிங்கிள் மதர் குழந்தைகள் அல்லது திருமணமாகாத தாய்க்கு பிறந்த குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் செயல்முறைகள் இந்த சட்ட திருத்ததால் எளிதாக இருக்கும்.
அனைத்து மருத்துவமனைகளும் இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை கட்டாயமாக்குவதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும் உறவினர்களுக்கு இறப்புக்கான காரணங்கள் குறித்த நகலையும் வழங்க வேண்டும். கொரோனா மாதிரியான பெரிய பேரிடர்களில் இறந்தால் அவர்களின் இறப்புகளை விரைவாக பதிவு செய்ய சிறப்பு சப்-ரிஜிஸ்ட்ரார்களை நியமிக்க சட்டதிருத்தம் அனுமதிக்கிறது. பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர்களிடம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற முடியும். சில விஷயங்களுக்கு அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவில் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications