அரசு ஊழியர்களுக்கான.. அசத்தல் அறிவிப்பு.. ஏற்கனவே உயருது சம்பளம்.. இப்ப இதுவேற.. மத்திய அரசு அதிரடி
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு சர்ப்ரைஸ் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதம் விரைவில் தொடங்க இருப்பதால் மறுபடியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. எனவே, ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படியானது 45 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது.. அதனால் ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் உயரக்கூடும்..
அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 4% உயர்வு வழங்கினால் ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக இருப்பின் மாத சம்பளம் ரூ.10,710 ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அகவிலைப்படி: இப்போது இன்னொரு தகவல் வெளியானது.. 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த DA உயர்வானது 4% அறிவிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி உயர்வானது, 46 % ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருவதால், இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

அடுத்த அதிரடி: இப்படி பல்வேறு அதிரடிகளை மத்திய அரசு முன்னெடுத்து வரும்நிலையில், அரசு ஊழியர்களுக்காக இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது..
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, யோகா பயிற்சியை தரப்போகிறதாம்.. அதுவும், அலுவலகத்திலேயே யோகா பயிற்சியை தரப்போகிறதாம்.. சர்வதேச யோகா தினம் வருகிற ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதனால், அலுவலகப் பணிக்கு இடையே, யோகா பயிற்சி செய்வதற்கான இடைவேளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
மனஅழுத்தம்: இதற்கு காரணம், நம் நாட்டில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கெல்லாம் பணிக்கு நடுவே யோகா பயிற்சி செய்ய இடைவெளி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது... இது சம்பந்தமாக மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "சர்வதேச யோகா தினம் ஜுன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. எனவே, ஆயுஷ் அமைச்சகம் புதிய நடைமுறையை பரிந்துரைத்துள்ளது. இந்த அறிவிப்பானது அலுவலக மற்றும் குடும்ப காரணங்களால் யோகா பயிற்சி செய்ய முடியாமல் இருப்பவர்கள், அலுவலகத்தில் பயிற்சி செய்யலாம்.. இதற்காக தேனீர் இடைவெளி போல யோகா இடைவேளை தரப்படும்.. இதன் மூலம் தங்களுடைய நாற்காலியில் இருந்தபடியே மத்திய அரசு அதிகாரிகள் எளிமையாக யோகா பயிற்சி செய்யலாம்.
வழிமுறைகள்: மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம், இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த பயிற்சி வழிமுறைகளை வகுத்து இருக்கின்றன. மேலும் இந்த பயிற்சிகள் சுலபமான ஆசனங்கள், பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி, தியானம் என எளிமையாக இருக்கும். இது குறித்து அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications