விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. "ஓகே" சொல்லி வயிற்றில் "பால்வார்த்த" மத்திய அரசு.. குஷியில் உழவர்கள்
சென்னை: விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும், சலுகைகளையும் மத்திய அரசு வழங்கி வரும்நிலையில், இன்னொரு அதிரடியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குறு, சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், "பிரதமர் கிசான் சம்மான் நிதி" (பிஎம் கிசான்) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தொடங்கி நடத்தி வருகிறது. குறு, சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

வங்கிக்கணக்கு: இதன்படி, பயிர் சாகுபடி செய்வதற்கான நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.. இந்த திட்டத்துக்காக நடப்பு 2023-24 நிதி ஆண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு: அதுமட்டுமல்ல, சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதி உதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.
இதுஒருபுறம் இருந்தாலும், விவசாயிகளுக்கு நல்ல விதைகள் கிடைக்கவும், அவர்கள் தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவும், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் முன்னேற்றம் அடையவும், புதிய கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது. இப்படி எண்ணற்ற வசதிகளை விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செய்து வரும்நிலையில், இன்னொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒப்புதல்: அதன்படி, 2024-2025-ம் ஆண்டிற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, 2024-25-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்திற்கான அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த தற்போது ஒப்புதல் அளித்துவிட்டதாம்.
அதுமட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலை முழுமையான உயர்வானது பருப்பு (மசூர்) ஒரு குவிண்டாலுக்கு ரூ.425 ஆகவும், ராப்சீட் - கடுகு குவிண்டாலுக்கு ரூ.200 ஆகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, கோதுமை, குங்குமப்பூவிற்கு, குவிண்டாலுக்கு தலா ரூ.150யும், பார்லி, பருப்புகளுக்கு முறையே குவிண்டாலுக்கு ரூ.115 மற்றும் குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
டபுள் குஷி: மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதன்மூலம், விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை விவசாயிகளால் உறுதி செய்ய உதவும்.. எனவே, இந்த விலை உயர்வால், விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications