ஆளையே விழுங்கும் ஆன்லைன் கூரியர்! உஷாரா இல்லைனா அவ்வளவுதான்! மோசடியிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்க
சென்னை: ஆன்லைன் வர்த்தகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கூரியர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பது குறித்த அறவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை பொறுத்த அளவில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 7.1 லட்சத்திற்கும் அதிகமான ஆன்லைன் வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இது தற்போது சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் கூரியர் மோசடிகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ ஒருவர், ஆன்லைன் கூரியர் மோசடியில் சுமார் ரூ.2.3 கோடியை இழந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவருக்கு அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து ஃபோன் கால் வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய நபர், கூரியர் வந்திருப்பதாகவும், அதில் போதை பொருட்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது இது சட்டவிரோதம் எனவும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதிலிருந்து விடுதலையாக வேண்டும் எனில் ஆர்பிஐக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூரியர் சர்வீசிலிருந்து பேசியிருக்கிறார். இதனை நம்பிய சிஇஒ, 8 வங்கி கணக்குகளுக்கு ரூ.2.3 கோடியை பிரித்து பிரித்து அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பின்னர் கூரியர் நிறுவனத்திடமிருந்து எந்த ஃபோன் காலும் வரவில்லை. கடைசியாக தான் ஏமாற்றப்பட்டிருப்பதை சிஇஓ உணர்ந்திருக்கிறார். இச்சம்பவம் ஆன்லைனில் வர்த்தகம் செய்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஇஓ போலீசில் புகார் அளித்ததால் இந்த மோசடி குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால், இதுபோன்று ஏராளமான வழிகளில் மோசடிகள் நடைபெறுகின்றன. இது போன்ற சிக்கலில் மாட்டாமல் இருக்க மத்திய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதாவது, ஆன்லைன் கூரியர் மோசடியில் ஈடுபடுபவர்கள் பொதுவாக சில யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதில் முக்கியமானது, "பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். இதிலிருந்து விடுபட வேண்டும் எனில் பணம் செலுத்த வேண்டும்" என்று சொல்லி பேச தொடங்குவார்கள். அப்போதே உஷாராகி விட வேண்டும்.
மோசடியில் சிக்குவதை தவிர்க்க, கூரியர் டெலிவரி அதிகாரி என்று பேசுபவர்களிடம் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை ஷேர் செய்ய கூடாது.
உண்மையான கூரியர் நிறுவனங்கள் எதுவும் உங்களுடைய வங்கி கணக்கு, ஓடிபி(OTP), இமெயில் விவரங்களை கேட்காது.
முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வரும்போதும், பணம் செலுத்த வேண்டும் என்று அவசரப்படுத்தும் அந்த ஃபோன் கால்கள் சந்தேகத்திற்குரியவை என்பதை உணர வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு கிடைக்கும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதனை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும்.
உங்களுக்கு வந்த ஃபோன் கால் குறித்து ஏதேனும் பணத்தை அனுப்புவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்திற்கு நேரடியாக ஃபோன் செய்து நீங்கள் இரண்டு முறை தகவலை உறுதி செய்துகொள்ளவும்.
முக்கியமான விஷயம் ஆன்லைனில் காட்டும் ஹெல்ப்லைன் நம்பர்களை நம்ப கூடாது.
நீங்கள் ஏமாறப்போகிறீர்கள் என்று தெரிந்துவிட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். தவறாக பணம் செலுத்திவிட்டாலும் அது குறித்து புகார் அளியுங்கள். அது உங்களை போன்று மற்றவர்கள் சிக்காமல் இருக்க காப்பாற்றும்.
என மத்திய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications