சென்னை டூ ஆஸ்திரேலியா கடத்த முயன்ற.. 110 கோடி ரூபாய் போதைப்பொருள்.. தட்டித்தூக்கிய புலனாய்வுத் துறை
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்ந்து இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் சென்னை துறைமுகத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருந்த ஒரு சரக்குப் பெட்டகத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சரக்கு கப்பலில் இருந்த ஒவ்வொரு பார்சலையும் கீழே இறக்கி பார்த்தனர். அப்போது, அந்தப் பெட்டகத்தில் 450 மூட்டைகள் இருந்துள்ளன. அதனை சோதனை செய்தபோது அந்த மூட்டைகளில் தலா 50 கிலோ எடைக் கொண்ட படிகக் கற்களின் பவுடர்கள் இருந்துள்ளன. அதற்கடியில் சோதனை செய்து பார்த்தபோது 37 பாக்கெட்களில் தலா 3 கிலோ சூடோ எபிஃட்ரின் என்ற போதைப் பொருள்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப் பொருளின் மதிப்பு சந்தை மதிப்பில் சுமார் 110 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, போதைப் பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பார்சல் எந்த பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த இருவரின் பெயரில் இந்த பார்சல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக ஷிப்பிங் ஏஜென்ட்களான அபுதாஹீர் மற்றும் அகமது பாட்ஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஷிப்பிங்கில் ஏஜென்டாக பணியாற்றி வந்ததும், தொலைபேசி அழைப்பின் மூலமாக இந்த பார்சல்களை தங்களுடைய பெயரில் பதிவு செய்து ஆஸ்திரேயாவுக்கு அனுப்பியதாகவும், இந்த பார்சல்களில் போதைப் பொருள்கள் இருப்பது குறித்து தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியதாக 2 சொகுசு கார்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள்களை கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, போதைப் பொருள் சென்னைக்கு எங்கிருந்து வந்தது என்றும், போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ள கும்பல் யார், ஆஸ்திரேலியாவில் இருந்து தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் உற்பத்திக்கு தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சூடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications