பணிந்தது பாஜக அரசு..தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்! 100 நாள் வேலை திட்ட நிதியை விடுவித்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய ஊழியர்களுக்கு 4000 கோடி ரூபாய் நிதி வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான 2999 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது. மேலும் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையாக 1246 கோடி ரூபாய் மீதி தொகையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் கிராமங்களில் விவசாயிகள் பெண்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த வேலை வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊரக வேலை திட்டத்திற்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

MGNREGA central government tn govt

இதனையடுத்து மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு சம்பளத் தொகையை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து தி‌முக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுவிக்காமல் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு தரவேண்டியுள்ள 4034 கோடி ரூபாயை தர மறுக்கிறது. இங்கு மட்டுமல்ல பாஜக இன்றி எதிர்க்கட்சிகள் ஆளுகிற எல்லா மாநிலத்திலும் 100 நாள் வேலைத்திட்ட தொகை தரப்படவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி தரப்படுகிறது என திமுக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான 2999 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு சுமார் 434 கோடி நிதியை விடுவிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகிய தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வந்தனர்.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய 2999 கோடி ரூபாய் 100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு தற்போது விடுவித்து இருக்கிறது. அதே நேரத்தில் 2024 2025 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையாக சுமார் 1246 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கத்தோடு கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஆண்டில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு 100 நாள் வேலை அளிக்கப்படுகிறது. சுமார் 25 கோடி பேர் இதில் பதிவு செய்திருக்கும் நிலையில், 14 கோடி பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+