வெப்ப அலை..கோடை கால நோய்களை கண்காணியுங்கள்..எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது..மத்திய அரசு
கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை: கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க மாநில அரசுகள் செய்ய வேண்டியவை குறித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கோடை கால நோய்களில் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது எனவும் மத்திய அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும் காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கோடை காலத்தில் சுகாதார வசதிகளை மாநிலங்கள் திறம்பட தயார்படுத்தவேண்டும். இதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகளை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் "வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல் திட்டம்" என்ற பிரிவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

வெப்ப நோய்களை தவிர்க்க வேண்டும்
மாநிலத்தின் சுகாதாரத் துறைகள், மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் வெப்பம் சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமும் வெப்பம் சார்ந்த நோய்களை தடுப்பதற்கு அல்லது சிகிச்சை மேற்கொள்வதற்கு கிராம அளவில் சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
வெப்ப அலை விபரங்கள்
ஒவ்வொரு நாளும் வெப்பநிலை குறித்த விவரங்கள் மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும். இதன் மூலம் வெப்ப அலைகள் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும். இதை மாவட்ட அளவில் பகிர்ந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
கோடையில் என்ன செய்யலாம்
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் வெப்ப அலை குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கோடை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, 2015ல் இருந்து இத்தகைய அலைகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியா அதன் வெப்பமான மார்ச் மாதத்தை சந்தித்தது. கடுமையான வெப்ப அலைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து தப்பிக்க சுகாதார அமைச்சகம் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. தாகம் இல்லையென்றாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
குடிமக்கள் நீர் சத்து குறைபாட்டை தடுக்க நீர் கரைசலை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் எலுமிச்சை நீர், மோர் பால்,லஸ்ஸி, பழச்சாறுகள் பானகம் போன்ற சில உப்பு சர்க்கரை சேர்த்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை உட்கொள்ள வேண்டும்.
மெல்லிய, தளர்வான, பருத்தி ஆடைகளை அணிந்துகொள்வது நல்லது, மேலும் சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, தொப்பி, துண்டு மற்றும் பிற பாரம்பரிய தலை கவசங்களைப் பயன்படுத்தி தலையை மறைக்கவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

என்ன செய்யக்கூடாது
வெப்ப அலைகள் வீசும் நேரங்களில் காரணமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மக்கள் நன்கு காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் வீட்டிற்குள் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளைத் தடுக்க பகலில் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மூடி வைக்க வேண்டும்
வெளியே செல்வதாக இருந்தால்,வெயில் வருவதற்கு முன் காலை நேரத்திலும் வெயில் குறைந்த பின்னர் மாலை நேரத்திலும் வெளியில் செல்லுங்கள். கூடுமானவரை வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications