இந்த வீக்எண்ட்.. சென்னைக்கு கொண்டாட்டமாக இருக்க போகுது.. வரப்போகும் மழை.. ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
சென்னை: கோடைகாலத்தை முன்னிட்டு சம்மர் வெக்கேசனாக சுற்றுலா போனவர்கள், சொந்த ஊருக்கு சென்றவர்கள் எல்லாம் படிப்படியாக சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல செய்தி, சென்னையில் இந்த வார இறுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாம். அதே நேரம் சென்னையில் வெப்பநிலை அதிகமாகவே இருக்குமாம்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்ந்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டை சர்வ சாதாரணமாக தாண்டுகிறது. சென்னை மற்ற நகரங்களைப் போல் இல்லை. இது முற்றிலும் கான்ங்ரீட் காடு. மரங்களே ஆக்சிஜன் தேடி அலையும் இடமாக சென்னை மாறி உள்ளது. வெயிலுக்கு விபூதி அடிக்க எந்த வழியும் இல்லாமல் வலிகளுடன் ஒவ்வொரு நாளையும் மக்கள் கடந்து வருகிறார்கள்.

இங்கு ஏசி தான் குளுமையை தருகிறது. எங்காவது ஓரிரு இடத்தில் தான் மரங்கள் இருக்கின்றன. சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் அடுத்த சில நாட்களில் வெப்ப நிலை 40 டிகிரி வரை உயரலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் சென்னை வானிலை ஆய்வு மையமோ, இந்த வார இறுதியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம். சென்னையில் ஜூன் முதல் வாரம் வரை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொடும் என்கிறார்கள்.

அதாவது சென்னையில் வரும் வாரங்களில் வெப்பநிலை 104 பாரன்ஹீட்டையும் தாண்டும். அதேநேரம் மே இறுதியில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. இதன்படி இந்த வார இறுதியில் சென்னையில் மழை பெய்யக்கூடும்.சென்னையில் மே 25ம் தேதி தொடங்கி (நாளை) மே 29 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்குமாம்.
தனியார் வானிலை ஆய்வாளர் ஜான் பிரதீப் கூறும் போது, தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பு எப்படி இருக்குமோ அப்படித்தான் வழக்கமான நிலை இருக்கும். இப்போது உள்ள வானிலையே ஜூன் மாதம் முதல் வாரம்வரை தொடரும் என்று கூறினார்.
இதனிடையே அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் பருவ மழை தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications