சென்ட்ரலுக்கு பதில் திருத்தணியிலிருந்து புறப்படும் ரயில்கள்! லிஸ்ட் இதோ! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: புயல் வெள்ளம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.
கடந்த 5ம் தேதி தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது. இது சென்னைக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னைக்கு மழை பொழிவை மிக்ஜாம் கொடுத்து சென்றிருக்கிறது. எனவே கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்பை சென்னை எதிர்கொண்டது. மழை நின்று 3 நாட்கள் ஆகியுள்ளதால் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.

இருப்பினும் சென்னையின் நகர் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகள் முழுமையாகவும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. எனவே புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒருபுறம் சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் சீராக இயக்கப்பட்டது. ஆனால் மறுபுறம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே அரக்கோணத்திலிருந்து வரும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
பேசின் பாலத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு ரயில்கள் இயக்கப்படாமல், கடற்கரைக்கு இயக்கப்பட்டன. இந்நிலையில் இன்று பேசின் பாலத்தின் தண்டவாளத்தில் வெள்ளம் வடிந்திருப்பதால் அரக்கோணம்-சென்ட்ரல் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. இருப்பினும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் வண்டிகள் அரக்கோணம், திருத்தணியிலிருந்து இயக்கப்படுகின்றன.
அதாவது சென்னை சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 12679) இண்டர்சிட்டி இன்று மாலை 4.15 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்படும். கோவை-சென்னை இண்டர்சிட்டி (12680) எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும் சென்னை-மும்பை ரயில் (22160), சென்னை-லோக்மான்யதிலக் (12164) ரயில்கள் திருத்தணியில் இருந்து புறப்படும். மைசூரு-சென்னை காவிரி (16022) எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரையிலும், ஹூப்ளி ரயில் (17313) திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படும்.
இது தவிர இடா நகர்-சென்னை (20920) ரயில் அரக்கோணம் வரையும், லோக்மான்ய திலக் (12163) திருத்தணியுடனும் நிறுத்தப்படுகிறது. ஹவுரா-சென்னை (12839) ரயில், சந்திரகாசி (22807) ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை வந்தடையும். கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலும் (20644) சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.





-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications