சென்னைக்கு ஹை அலர்ட்.. அபாய கட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி! 9 மணிக்கு வெளியேறும் 1000 கனஅடி நீர்
சென்னை: கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 452 கன அடியாக இருந்த நிலையில் தற்போது அது 514 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.

3,645 மி.கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3,210 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.35 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 1000 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்து இருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிகளான சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை, அடையாறு, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அடையாறை பொறுத்தவரை 40 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் கரையோரம் மற்றும் அதன் நீர் வெளியேற்ற பாதையில் அமைந்து இருக்கும் பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications