செம்பரம்பாக்கம் ஏரி.. எங்கிட்ட சொல்லாமலே திறந்துவிடுவீங்களா? அதிகாரிகளிடம் டென்ஷனான செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளில் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகமானதால், 500 கன அடி நீர் இன்று திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'மக்கள் பிரதிநிதியான என்னிடம் அணையில் இருந்து நீர் திறந்ததை பற்றி ஒருவார்த்தை சொன்னால் என்ன?' என அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார்.
கடந்த 16-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த 4 நாட்களாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தற்போது வரை இயல்பை விட 59 சதவீதம் அதிக மழைப் பொழிவு இருந்ததாக வானிலை மையம் கூறியது. மேலும் தொடர்ந்த மழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்தது. ஏரிகளின் நீர்மட்டமும் திக்குமுக்காக உயர்ந்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. தொடர்ந்த நீர்வரத்து அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலையில் விநாடிக்கு 100 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது. நேற்று இரவும் கனமழை தொடர்ந்ததால் நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
அதிகாரிகளை கடிந்த செல்வப்பெருந்தகை
குறிப்பாக இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,220 கனஅடி நீர் வரத்து அதிகரித்தது. இதனால் இன்று 500 கனஅடி நீரை திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான செல்வப்பெருந்தகை செம்பரம்பாக்கம் ஏரியில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது 500 கனஅடி நீர் திறந்தது பற்றி அதிகாரிகள் தன்னிடம் எதுவும் சொல்லாததால் கடிந்து கொண்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்து "மக்கள் பிரதிநிதியாக என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை?" என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். செல்வப்பெருந்தகை கூறியது:-
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தெரியல.. சேர்மனுக்கு தெரியல. மந்திரிக்கு தெரியல.. எம்.எல்.ஏக்களுக்கு தெரியல.. நீங்களே திறந்து விடுகிறீர்கள் என்றால் என்ன அர்த்தம் சார்.. நீங்களே சொல்லுங்க.. அரசுத்துறை தானே.. நீர்வளத்துறை அரசு தானே.. மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன.. மரபு என்ன?.. ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா..
நானும் ஒரு மூன்று வருஷமாக திறந்துவிட்டு இருக்கிறேன்.. இதே மாதிரி போன வருஷமும் இப்படித்தான் நீங்களே திறந்துவிட்டுவிட்டீர்கள். தப்பு கிடையாது. நீங்களே திறங்க.. ஆட்சியாளர்கள் நீங்களே செய்யுங்க.. மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். இப்போது நான் தான் ஊர் ஊறாக போகப் போறேன்..
தண்ணீர் திறந்துட்டாங்க என சொல்லப் போகிறேன். 500 கன அடி திறந்துவிட்டிருக்கிறோம். பாதுகாப்பாக இருங்க என்று சொல்லப்போகிறோம்.. நீங்களே எல்லாத்தையும் செஞ்சிட்டா எப்படி.. தப்பு இல்லையா.. மக்கள் பிரதிநிதியிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications