இனி ரோட்டுல மாடு திரிஞ்சா அவ்ளோதான்.. “செக்”! அபராத தொகை 5 மடங்கு உயர்வு.. சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னை: சென்னையில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூபாய் 10,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாய் மற்றும் சகோதரனுடன் நடந்து சென்ற ஒரு பள்ளிச்சிறுமியை, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கியது. தொடர்ந்து அருகில் இருந்த ஒருவர் தடியால் மாட்டை விரட்டி சிறுமியை காப்பாற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், கவனக்குறைவாக இருப்பது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடந்து வந்தது. ப்போது மாடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு ரூ. 2000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் அதிகளவு விபத்து ஏற்படுவதால் சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் அபராதத்தை 10 ஆயிரம் ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூடியது. அப்போது சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாடுகளின் உரிமையாளர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அபராத தொகையை 10ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாலருக்கு 5,000 ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்படும் என சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3468 மாடுகள் பிடிக்கப்பட்டு, 65 லட்சத்து 80ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications