இரவு நேரம்.. லிப்ட்டில் சிக்கித் தவித்த பெண் ஊழியர்.. மயக்கம்.. செங்கல்பட்டில் ஷாக்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், லிப்டில் சிக்கித்
தவித்த பெண் துப்புரவு ஊழியர், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 100க்கும் மேற்பட்ட
தனியார் ஒப்பந்த ஊழியர்கள், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியாளர்கள்
பணியாற்றி வருகின்றனர். இதில், செங்கல்பட்டு அருகேயுள்ள உதயம்பாக்கம்
பகுதியைச் சேர்ந்த ஜானகி என்பவரும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு
பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு துப்புரவு ஊழியரான ஜானகி, வழக்கம் போல் பணியாற்றி
விட்டு, பணிமுடிந்து, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 3-வது மாடியில் இருந்து,
லிப்ட் வழியாக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப
கோளாறு காரணமாக அந்த லிப்ட் பாதியிலேயே பழுதாகி நின்று விட்டது. இதனால்
சுமார் அரை மணி நேரமாக பெண் ஊழியர் ஜானகி, லிப்ட் குள்ளேயே சிக்கி தவித்துள்ளார்.
இதனிடையே இந்த சம்பவம் அறிந்த அவருடன் பணியாற்றி வரும் சக ஊழியர்கள், லிப்டில் சிக்கித் தவிக்கும் பெண் ஊழியர் ஜானகியை லிப்ட்டில் இருந்து மீட்க முயன்றனர். நீண்ட நேரம் கடுமையாக போராடி, லிப்டின் கதவை இரும்பு கம்பிகளால் உடைத்து உள்ளே இருந்த ஒப்பந்த ஊழியர் ஜானகியை மீட்க முயன்றனர். பின்னர், லிப்டுக்குள் இருந்த ஜானகி, மூச்சுத் திணறி மயங்கிய நிலையில் சக ஊழியர்களால் பத்திரமாக மீட்டகப்பட்டார்.

லிப்டில் சிக்கித் தவித்த பெண் ஊழியர் ஜானகி மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் முதலிதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து பின்னர் அவர் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏற்கெனவே 3 லிப்டுகளில் 2 லிப்டுகள் சரியாக வேலை செய்யாத நிலையில்,
மூன்றாவது லிப்டும் தற்போது திடீரென பழுதாகியுள்ளது. இதனால், நோயாளிகள்
மற்றும் அங்கு வேலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் இடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில்
உள்ள லிப்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கித் தவித்த பெண்
துப்புரவு பணியாளர், கடும் போராட்டத்திற்குப் பின்னர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம், மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications