ஷாக்கிங்.. சென்னை துப்பாக்கி சூட்டின் அதிர வைக்கும் பின்னணி. . சுட்டது இவர்தானாம்.. பயங்கரம்!

சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதில் கொலையாளி சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே வீட்டிற்குள் அப்பா, அம்மா, மகனை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.. 3 பேரையுமே சுட்டுக் கொன்றது அந்த வீட்டு மருமகள்தான் என்பது தெரியவந்துள்ளது.. மாமனார், மாமியார், கணவனை கட்டிப்போட்டு, 3 பேரின் நெற்றிப்பொட்டிலும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் மருமகள் ஜெயமாலா.. கொலை நடந்த நேற்றில் இருந்து சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்து வரும் நிலையில், இந்த தகவலால் மேலும் ஷாக் ஆகி உள்ளனர்.

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.

 துப்பாக்கி

துப்பாக்கி

இந்நிலையில், நேற்றிரவு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து அப்பா, அம்மா, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.. ஆனால் யார் கொன்றார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.. ஒருவேளை சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

 சிசிடிவி

சிசிடிவி

முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.. கொலை நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கொலையாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

 ஜெயமாலா ஜெயமாலா

ஜெயமாலா ஜெயமாலா

இத்தனை கொலைகளையும் செய்தது சாட்சாத் ஜெயமாலாதான் என்பது தெரியவந்துள்ளது.. ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், டைவர்ஸ் கேட்டுள்ளார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்சம் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.

 மாமனார்

மாமனார்

இதற்காக அடிக்கடி சென்னை வந்தும் பேசிவிட்டும் சென்றுள்ளார். மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார்.. அதனால் மருமகள் கேட்டபடி சொத்து எழுதி தர ஒப்புக்காள்ளவில்லை.. இதுதான் வாக்குவாதமாக தொடர்ந்து வந்துள்ளது. நேற்றும் அப்படித்தான் புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்தார் மருமகள் ஜெயமாலா..

 ஆத்திரம்

ஆத்திரம்

வீட்டிற்குள் நுழைந்ததுமே சொத்து தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜெயமாலா, கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டினார்.. அவர்களை கட்டிவைத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் நெற்றிப்பொற்றில் சுட்டு கொன்றார். 3 பேரும் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.. இவ்வளவு தகவல்களும் வெளியாகி உள்ளதாலும், இவர்கள்தான் கொலையாளிகள் என்பதும் உறுதியாகி உள்ளதாலும், மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்ய நம் போலீசார் புனேக்கு விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+