சென்னையே அதிர்ந்தது.. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், இத்தனை பேரா? ஆடைகளை அவிழ்த்தால்.. 113 குருவிகளாம்
சென்னை: சென்னையே அதிர்ந்துபோய் கிடக்கிறது.. ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இத்துணை நபர்களா? என்று போலீசார் மிரண்டுபோய்விட்டனர்.
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள். அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்..

இது தமிழகம் முழுவதுமுள்ள ஏர்போர்ட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.. கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வரும்நிலையில், நேற்றுகூட சிலர் சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்டுள்ளனர்.
லேப்டாப்புகள்: மஸ்கட்டில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள், வெளிநாட்டு சிகரெட்களை நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் சம்பந்தப்பட்ட விமானத்தை கண்காணிக்க தொடங்கினர். அந்த விமானத்தில் மொத்தம் 186 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்களில் யார் கடத்தலில் ஈடுபட்டது என்பது தெரியாததால், அவர்களை நிறுத்தி, பல மணி நேரம் விசாரணை ஆரம்பமானது.. அதில், 73 பேர், கடத்தல் விவகாரங்களில் தலையிடாதவர்கள் என்பது உறுதியானது..
அதனால், மற்ற 113 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி, அதில் கடத்தலில் ஈடுபட்டது யாராக இருக்கும் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.
கடத்தல் தங்கம்: ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, ஆடைகளை களைந்து முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.. இதற்கே பல மணி நேரம் ஆகிவிட்டது.. ஆனால், போலீசாருக்கே சற்று அதிர்ச்சிதான். ஆனால், பெரிய அளவில் தங்கம் கடத்தப்பட்டதாக, சுங்கத்துறை எந்த தகவலையும் விசாரணையில் வெளியிடவில்லை. இவர்கள் எல்லோருமே தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார்கள்..
தங்களது உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப்பசைகள் என புது புது டிசைன்களில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டிருந்தது தெரியவந்தது.. அவர்களது சூட்கேஸ், பைகளை சோதனையிட்டதில், நிறைய ரகசிய அறைகள் இருந்தன.. அவைகளில் 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்புகள் என மறைத்து வைத்திருந்தனர். இதில் தங்கம் மட்டும், மொத்தம் 13 கிலோ இருந்ததாம்..
விசாரணை: பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 14 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, அவர்களை ஜாமீனிலும் விடுவித்தனர்.113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் என்பது ஊர்ஜிதமானது.. ஆனால், இவர்களை இயக்கும் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவர்கள் யார்? சம்பந்தப்பட்ட விஐபிகள் யார்? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications