Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சர் சர்னு பறக்கலாம்! சென்னை ஏர்போர்ட்டில் வேற லெவல் வசதி.. மேஜர் மாற்றத்தால் பயணிகள் செம ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முக்கியமான ஒரு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது ஏர்போர்ட்டில் பயணிகள் அனுபவத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும்.

இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிற்கும் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து தினசரி பல நூறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 Chennai airport soon to get flow management system at new international terminal

சென்னை ஏர்போர்ட்டில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் தான் அங்கே புதிய ஒருங்கிணைந்த முனையம் திறக்கப்பட்டது.

புதிய முனையம்: இதற்கிடையே இந்த சென்னை விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையத்தில் பயணிகள் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தவும் இந்திய விமான நிலைய ஆணையம் முக்கிய திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளது. தற்போது வரை இது தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே இருக்கிறது. அது என்ன.. சென்ன பயணிகளின் அனுபவத்தை எப்படி இது மாற்றப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.

பெங்களூரு, மும்பை, டெல்லி என தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் ஏர்போர்ட் முழுக்க அதிநவீன சென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நுழைவு வாயில்கள், செக்-இன் கவுண்டர்கள், பாதுகாப்பு சோதனை என ஒவ்வொரு இடத்திலும் பயணிகள் எத்தனை நேரம் செலவழிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவுகிறது.

நடவடிக்கை: பாதுகாப்பு பகுதி. ஏர்போர்ட் குறித்து முக்கிய தரவுகளை திரட்ட இது பெரியளவில் உதவும். இந்த டேட்டாவை கொண்டு ஏர்போர்ட்டில் நெரிசலைக் குறைக்கவும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும் திட்டத்தை வகுப்பார்கள். மேலும் பயணிகள் எங்கே அதிக நேரம் வீணடிக்க வேண்டி இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அங்கும் எளிதாகவும் விரைவாகவும் பயணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் ஒரு இடத்தில் நெரிசல் ஏற்பட்டால் இந்த சென்சார்கள் அதைக் கண்டறிந்து அலர்ட் தரும்.. ரியல் டைமில் எங்கு திடீர் நெரிசல் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய இது உதவுகிறது. அதை வைத்து உடனடியாக குறிப்பிட்ட இடத்தில் கூடுதல் ஊழியர்களை அனுப்பி நெரிசலைக் குறைக்க முடியும். இதன் மூலம் பயணிகள் எந்தவொரு இடத்திலும் நெரிசல் காரணமாக அதி நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

அதிநவீன தொழில்நுட்பம்: சென்னையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தையும் கொண்டு வர உள்ளனர். இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து அனைத்து நிறுவனங்களும் இந்த புதிய முனையத்தில் இருந்தே விமானங்களை இயக்கி வருகிறது.

இந்தச் சூழலில் தான் இந்த சென்சார்களையும் பயன்படுத்திக் கூட்ட நெரிசலைக் குறைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சென்சார்களை தவிரப் பல அட்டகாசமான வசதிகளும் இந்த புதிய முனையத்தில் அமைகிறது. குறிப்பாக செல்ஃப்-பேக்கேஜ் டிராப் டெஸ்க்குகள் இங்கே அமைக்கப்படுகிறது. மேலும், செல்ப் செக் இன் முறையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

பல அதிநவீன வசதிகளுடன் கட்டப்படும் இந்த புதிய சர்வதேச முனையத்தால் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பயணிகளைக் கையாள முடியும். விமான பயணிகளின் எண்ணிக்கை இந்தளவுக்கு அதிகரிக்கும் போது கூட்டம் ஒரே இடத்தில் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த சென்சார்கள் நிச்சயம் உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+