Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைதாகும் சீமான்? கருணாநிதி சர்ச்சையால் சம்மனுக்கு ரெடியாகும் ஆவணங்கள்! போலீசின் அடுத்த திட்டம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியது தொடர்பாக சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணைக்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை அதிகாரி வழக்கு தொடர்பாக ஆவணங்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விரைவில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதன் பிறகு அவர் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சியின் அபிநயா பொன்னிவளவன் 10,602 ஓட்டுகளும் பெற்று 3வது இடம் பிடித்தார்.

seeman ntk fir

முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பாடிய பாடல் சர்ச்சையானது.

சாட்டை துரை முருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர சீமான், சாட்டை துரை முருகன் பாடிய பாடலை பாடியதோடு, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விட்டார்.

இதையடுத்து சீமான் மீது பல போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சீமானுக்கு எதிராக அஜேஸ் என்பவர் சென்னை பட்டாபிராம் போலீசில் புகாரளித்தாலும் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் மாநில பட்டியலின ஆணையத்தில் புகாரளித்தார். பட்டியலின ஆணையம் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி காவல் ஆனையகரத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து கடந்த 31ம் தேதி பட்டாபிராம் போலீசார் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு சீமானிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பட்டாபிராம் உதவி காவல் ஆணையர் சுரேஷ் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் தற்போது விசாரணை அதிகாரி சுரேஷ் குமார் வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சீமான் பேச்சு, அஜேஸ் வழங்கிய புகார், மாநில பட்டியலின ஆணையம் வழங்கிய உத்தரவு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து ஆவணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்ததாக சீமானுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த சம்மனை தொடர்ந்து இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் சீமானிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை என்பது சீமான் வீட்டில் வைத்து நடக்கிறதா? அல்லது சீமானை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்க உள்ளனரா? என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் போலீசாரின் இந்த செயல் சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இதுதொடர்பான விவகாரத்தில் சாட்டை துரைமுருகன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து திருச்சி போலீசார் கைது செய்தனர். அதேபோல் தான் தற்போது சீமான் மீதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சீமானும் விசாரணையின்போது கைது செய்யப்பட உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+