சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயிலில் நாளை ட்ராவல் பண்ண போறீங்களா.. இதை நோட் பண்ணிக்கோங்க
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலைத்தில் நாளை காலை 11.10 முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது மின்சார ரயில்கள் தான். போக்குவரத்து நெரிசல் இன்றி திட்டமிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சென்னையில் ரயிலில் செல்வது தான் பெஸ்ட். மற்ற்படி கார், பைக், பேருந்துகளில் எல்லாம் சென்றால் எப்போது டிராபிக் நெரிசல் ஏற்படும் என்றே தெரியாது.

மின்சார ரயில்: அதிலும் பீக் நேரங்களில் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு சிக்னல்களிலும் காத்திருந்து காத்திருந்து போவதற்குள் திண்டாடிப்போவார்கள். எனவேதான், மின்சார ரயில்களில் பயணிகள் விரும்பி பயணிப்பதுண்டு. அதிலும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
சில நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்பட்டாலும் கூட.. ஒரிரு ரயில் வராவிட்டால் கூட பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல முக்கிய வழித்தடமாக இந்த சென்னை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் உள்ளது. சென்னை புறநகரில் இருந்து கூட தினமும் சென்னை சிட்டிக்குள் வேலை பார்க்கும் பலரும் இந்த ரயில்களை நம்பியே உள்ளனர்.
பராமரிப்பு பணி: கட்டணம் குறைவு.. சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து விடும் என்பதால் செங்கல்பட்டில் இருந்து கூட தினமும் வியாபாரிகள், அலுவலகம் செல்வோர்.. கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்த புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். புறநகர் மின்சார ரயில்களை பொறுத்தவரை அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு: வழக்கமாக வார இறுதிநாட்களில் இத்தகைய பராரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவை சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சிங்க பெருமாள்கோவில்: இது குறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், "செங்கல்பட்டு ரயில் நிலைத்தில் நாளை காலை 11.10 முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9.25 மணி மற்றும் காலை 10 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக நாளை காலை 11.20, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications