சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு ரயில்கள் பகுதியளவு ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம், மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர். இதில் குறிப்பிட்ட அளவு மக்கள் இங்கேயே தங்கிவிடுகின்றனர். இது நகரின் மொத்த மக்கள் தொகையை அதிகரிக்க காரணமாகவிடுகிறது. இத்தனை மக்களும் தினமும் சென்றுவர மிகப்பெரிய போக்குவரத்து கட்டமைப்பு தேவை. அதை தெற்கு ரயில்வே சிறப்பாக செய்திருக்கிறது. சென்னையின் புறநகர் மக்களை நகரின் ஓட்டத்துடன் இந்த ரயில்கள் சிறப்பாக இணைத்துள்ளன.

ஒவ்வொரு நாளும் சுமார் 20-25 லட்சம் பயணிகளை சென்னை புறநகர் ரயில்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நகரின் இயக்கத்திற்கு இவ்வளவு முக்கியமான இந்த ரயில்சேவையை பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே பராமரிப்புக்காக அவ்வப்போது புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 17ம் தேதியும் சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை எழும்பூர் - சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு இரயில்வே நிலையங்கள் இடையே இன்று முதல் 23ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் நவ.20 முதல் நவ.23 வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இதை கவனத்தில் கொண்டு பயணங்களை திட்டமிட வேண்டும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். பகுதி அளவில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிங்கப்பெருமாள் கோவில் முதல் செங்கல்பட்டு வரை புறநகர் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications