இதுதான் இப்போது அவசியம்.. உள்ளே வரும் "தனியார்".. சென்னையின் 2 பெரிய பீச்கள்.. அடியோடு மாறப்போகின்றன
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைக் கட்டுப்பாட்டை அவுட்சோர்ஸ் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது தற்போது அரசே மேற்கொள்ளும் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
ராயபுரம் மற்றும் திரு வி கா நகர் - மண்டலங்கள் 5 மற்றும் 6-ல் உள்ள திடக்கழிவு மேலாண்மையை குடிமை அமைப்பு சமீபத்தில் தனியாரிடம் ஒப்படைத்ததை அடுத்து மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

இரண்டு மண்டலங்களையும் தனியார் மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜி.சி.சிதான் கடற்கரைகளை கவனித்து வருகிறது. கடற்கரைகளில் திடக்கழிவு மேலாண்மை தனியார்மயமாக்கலுக்கான டெண்டர்கள் மண்டலம் 5 மற்றும் 6 க்கான டெண்டர் செயல்முறையுடன் எடுக்கப்பட்டு வெற்றிகரமான ஏலதாரருக்கு மாற்றப்படும்.
மாநகராட்சி இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடற்கரையை சுத்தம் செய்ய ஹெவி டியூட்டி மெக்கானிக்கல் துப்புரவு சாதனங்களை பயன்படுத்தப்படுவார்கள்" என்று ஜிசிசி கமிஷனர் ஜே குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) ஜூலை 29 முதல் அதன் அனைத்து மண்டலங்களிலும் மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்து உள்ளது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கைவிடப்பட்ட வாகனங்களை பெருமளவில் சுத்தம் செய்து அகற்றும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜூலை 22ம் தேதி பைலட் திட்டமாக சென்னையில் 3 மண்டலங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. இதையடுத்து கடந்த ஜூலை 29 முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றங்களை செய்து வருகின்றனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன் மற்றொரு சுற்று வெகுஜன சுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோதனை: முன்னதாக, அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை ஆணையர் ஆய்வு செய்தார். இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் ஆனையிறவுப் பாலம் (39.73 கோடி மதிப்பில்), கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் (₹226.5 கோடி), போஜராஜா நகர் லெவல் கிராசிங் (₹30.13 கோடி) உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கண்ணப்பர் திடலில் ₹6.20 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானம் மற்றும் ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை திரு.குமரகுருபரன் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை தயார்நிலை - மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.
குமரகுருபரன் ஐஏஎஸ்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார். நாய்க்கடி விவகாரம் மற்றும் சென்னையில் மாடுகள் தொல்லை விவகாரத்தில் இவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications