விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை நீலாங்கரையில் பரபரப்பு.. விரைந்த நிபுணர்கள்!
சென்னை: தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அருணா ஜெகதீசனும் பரப்புரை நடந்த இடத்திலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடமும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய்யின் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள நீலாங்கரை வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு இன்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் சென்னை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் வீட்டில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால் இது வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. எனினும் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து விஜய் வெளியே வா.. வெளியே வா என்று அவரது வீட்டின் முன்பு இன்று மாலை வீட்டை திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications