சென்னை மாநகர பஸ்சில் பயங்கரம்.. முகத்தில் ஓங்கி குத்திய இளைஞர்! முதியவர் உயிரிழப்பு.. பரபர தகவல்
சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து கொன்றுள்ளார்.
பேருந்தின் பெயர் பலகையை பார்க்காமல் முதியவர் ஏறிவிட்டதாகவும் இந்த பஸ் எங்கே செல்கிறது என்றும் இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு தெரியாது எனவும், நடத்துனரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு கூறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த பஸ் எங்கே போகின்றது?
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இன்று அவர் கூடுவாஞ்சேரியில் இருந்து வடபழனி செல்வதற்காக 70ஜி என்ற எண் கொண்ட பஸ்சில் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அதே பேருந்தில் தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி செல்வதற்காக பஸ்சில் இளைஞர் அமர்நாத் என்பவர் இருந்தார்.
கொத்தனாராக வேலை பார்த்து வரும் அமர்நாத் அருகில் முதியவர் சந்திரசேகரன் இருந்துள்ளார். அப்போது முதியவருக்கு பஸ் எங்கே செல்கிறது என தெரியவில்லை. பெயர் பலகையை பார்க்காமல் ஏறியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பஸ் எங்கே செல்கிறது என்று இளைஞர் அமர்நாத்திடம் கேட்டுள்ளார். அவர் வடபழனி நோக்கி செல்கிறது என பதில் அளித்துள்ளார். ஆனால் மீண்டும் அவர் அதே கேள்வியை கேட்டதாக கூறப்படுகிறது.
அடித்து கொலை
இதற்கு எனக்கு தெரியாது என்று சொன்ன அமர்நாத், நடத்துனரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் முதியவரை அமர்நாத் தாக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் முதியவரை முன் இருக்கையில் அமர கூறினர்.
அதன்பேரில் எழுந்த முதியவரை அமர்நாத் கழுத்தை பிடித்து நெரித்து, சரமாரியாக தாக்கினார். ஓடும் பேருந்துக்குள் வைத்தே இளைஞர் தாக்கியதில் முதியவர் அப்படியே சரிந்து விழுந்தார். இதனால் பேருந்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் முதியவரை ஆம்புலன்ஸ் மூலமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இளைஞர் கைது
மேலும் தப்பி ஓட முயன்ற இளைஞர் அமர்நாத்தை பிடித்து வைத்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அமர்நாத்தை கைது செய்தனர். ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications