சென்னை டூ தடா நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா! 8 நண்பர்கள் சென்ற காரில் ஒரு மாணவி பலி
சென்னை: சென்னையிலிருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்கள் 8 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் இருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு நண்பர்கள் 8 பேர் சேர்ந்து சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஒரு காரை ஏற்பாடு செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்றனர்.

நீர் வீழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. முன்பக்க கண்ணாடியெல்லாம் உடைந்து சுக்குநூறானது.
இந்த விபத்தில் சிக்கிய மாணவி ஒருவர் உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த மற்ற 7 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் யார், பெயர், ஊர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நீர் வீழ்ச்சி சென்னையிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இதற்கு தடா அருவி என்றும் உப்பலமடுகு நீர் வீழச்சி என்றும் சொல்வதுண்டு. இது காம்பகம் காட்டுபகுதியில் உள்ளது.
இங்கு பசுமையான நீர்வீழ்ச்சிகள், சிறு குன்றுகள் இருப்பதால் மலையேற்றத்திற்கு ஏற்ற பகுதியாகும். இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். மேலும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ பலர் செல்கிறார்கள்.
சென்னையிலிருந்து சூலூர்பேட்டை, நெல்லூர் போகும் ரயில்களும் பேருந்துகளும் தடா வழியாக செல்கின்றன. தடா ரயில் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் நீர் வீழ்ச்சிக்கு வந்தடையலாம். இந்த தடா நீர் வீழ்ச்சி அருகே தங்குமிடங்கள் இல்லாததால் காளஹஸ்தியில் அறை எடுத்து தங்கலாம்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications