ரயிலில் போறீங்களா? சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நவீன கருவி.. பயணிகளுக்கு மகிழ்ச்சி
சென்னை: நிரயில்வே ர்வாகம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இதய பிரச்சனைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகளை பொருத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷனில், பிளாட்பாரம் 4-ல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உட்பட 6 இடங்களில் நவீன கருவிகளை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்டிரல் ரெயில்வே ஸ்டேஷனில் 7 இடங்களில் இந்த நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.

AED என்று சொல்லக்கூடிய தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட்டர் என்பார்கள். அதாவது Automated external defibrillator என்ற இந்த நவீன கருவியானது, மனிதர்களின் இதயதுடிப்பை சரிசெய்யக்கூடியது..
நவீன கருவிகள்: ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிக்கு, திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டால், அவரது இதய துடிப்பை சரிசெய்தபிறகு, இந்த நவீன கருவி மூலம் முதலுதவி அளிக்கப்படும். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு வழங்கப்படும் உயிர்காக்கும் கருவிதான் இது.
இந்த கருவியைதான் முதல்கட்டமாக சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பொருத்த முடிவாகியுள்ளது. இதற்கு காரணம், 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் சென்னைக்கு, அதி முக்கிய ரெயில் நிலையங்களாக சென்டிரல் ஸ்டேஷனும், எழும்பூர் ரெயில் நிலையங்களும் விளங்கி வருகின்றன. வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்தும் புறப்படுகின்றன.
குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களும், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு 75,000-க்கு மேற்பட்டோர்களும் வந்து செல்கிறார்கள்.
என்ன காரணம்: இந்த 2 ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் தரப்பில் எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான், மாரடைப்பு ஏற்படும் பயணிகளுக்குமுதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாக, தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் என்ற நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
விரைவில் பயன்பாட்டுக்கு இந்த கருவிகள் வரஉள்ள நிலையில், இக்கருவியின் பயன்பாடு குறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, ரயில் நிலையத்துக்கு வரும் பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும்போது அல்லது இதய செயலிழப்புஏற்பட்டு சுயநினைவை இழக்கும்போது முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடுகள்: ஒருவருக்கு இதயம் செயல்படாமல் திடீரென நின்று, சுய நினைவை இழக்கும்போது, முதலுதவி சிகிச்சை அளிக்க இந்த கருவி பயன்படும். முதல்கட்டமாக சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதுதொடர்பாக ரயில்வே ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளித்து,அதன்பிறகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர்
தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED) கருவிகள் சமீபகாலமாகவே, ஷாப்பிங் மால்கள் மற்றும் பல பொது இடங்களில் கிடைக்கின்றன. இந்த கருவி இதயத்தை மறுபடியும் இயங்க வைப்பதற்கான அதிர்ச்சியை கொடுக்கிறது.. ஆனால், இந்த முதலுதவி நடந்துகொண்டிருக்கும்போதே ஒருவர் வேகவேகமாக அனைத்து வசதிகளும் தெரிந்த மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமாம்.. அப்போதுதான், மருத்துவமனையில் உடனடியாக இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டத்தில் இருக்கும் அடைப்பை நீக்க சிகிச்சைகளை துவங்குவார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications