Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன் பாயிண்ட்டில் கைது.. 'பகீர்’ திட்டம் போட்ட ரௌடியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்- பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தாம்பரம் பகுதியில் கொடூர திட்டம் தீட்டிய ரௌடியை சினிமா பாணியில், விரட்டிப் பிடித்து துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரி மாணவ, மாணவிகளைக் குறிவைத்து கஞ்சா, போதை ஊசி போன்றவற்றை கல்லூரி வளாகத்தில் விற்கச் சொல்லி பெரும் மாஃபியாவாகச் செயல்பட்ட ரௌடி விவேக் ராஜை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, பைபாஸ் மேம்பாலம் அருகே விவேக் ராஜையும், அவரது கூட்டாளி விஷாலையும் கைது செய்ய முயன்றனர்.

அப்போது தண்ணீர் குழாய் மீது ஏறி தப்பிக்க முயன்றுள்ளார் விவேக் ராஜ். உடனே விரட்டிப் பிடித்த போலீசார், துப்பாக்கி முனையில் விவேக்ராஜை கைது செய்தனர்.

கல்லூரி இளசுகளை குறிவைத்து

கல்லூரி இளசுகளை குறிவைத்து

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூரைச் சேர்ந்தவர் விவேக்ராஜ். இவர் 12 வழக்குகளில் தேடப்படும் பழைய குற்றவாளி. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள்தான் விவேக் ராஜின் குறி. கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா, போதை ஊசி போன்றவற்றைக் கொடுத்து கல்லூரி வளாகத்தில் விற்கச் சொல்லி, அதிக கமிஷன் தருவதாக ஆசை காட்டி, மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி வந்தவர் விவேக் ராஜ். இவர் பிரபல ரவுடியான 'சீசிங்' ராஜாவின் கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாம்பரத்தை கலக்கிய ரௌடி

தாம்பரத்தை கலக்கிய ரௌடி

மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் தொடர்புடையவர் விவேக் ராஜ். இது தொடர்பாகப் பல முறை கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியும், விவேக் ராஜின் அட்டகாசம் ஓயவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதும் 12 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விவேக் ராஜ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பயங்கர குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே, முன் விரோதம் காரணமாக விவேக் ராஜுக்கும் தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த லெனின், முகேஷ் ஆகிய ரவுடிகளுக்கும் இடையே தீராத பகை இருந்து வந்துள்ளது.

கொடூர திட்டம் தீட்டிய விவேக்

கொடூர திட்டம் தீட்டிய விவேக்

இதனால் விவேக் ராஜ், லெனின், முகேஷ் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தனது கூட்டாளி விஷால் என்பவருடன் இணைந்து திட்டம் தீட்டிய விவேக் ராஜ், பட்டப்பகலில் லெனின். முகேஷை தீர்த்துக்கட்ட பிளான் போட்டுள்ளார். அவரது கூட்டாளிகளின் நடவடிக்கைகள் மூலம் இந்தத் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் அலெர்ட் ஆன போலீசார், பொது அமைதியை நிலைநாட்ட, விவேக் ராஜை கைது செய்யத் திட்டமிட்டனர்.

சுற்றி வளைத்த ஸ்பெஷல் டீம்

சுற்றி வளைத்த ஸ்பெஷல் டீம்

விவேக் ராஜை பிடிப்பதற்காக ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டு தாம்பரம் ஏரியா முழுக்க சல்லடை போட்டு தேடினர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் முடிச்சூர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், விவேக் ராஜும், விஷாலும் மது அருந்திக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனே, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று டாஸ்மாக் பாரிலேயே விவேக் ராஜ் மற்றும் விஷாலை சுற்றி வளைத்தனர்.

‘கன்’எடுத்த போலீஸ்

‘கன்’எடுத்த போலீஸ்

போலீசாரை பார்த்ததும் அலெர்ட்டான விவேக் ராஜ் மற்றும் விஷால், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து போலீசாரை வெட்ட முயன்றனர். இதையடுத்து தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ், உடனே தனது துப்பாக்கியை எடுத்து ரௌடிகளை மிரட்டினார். துப்பாக்கியைப் பார்த்ததும், என்கவுண்டர் செய்யப்போவதாக பயந்து இருவரும் தப்பி ஓடத் தொடங்கினர்.

 நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து

நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து

போலீசாரும் அவர்களை விரட்டத் தொடங்கினர். தண்ணீர் குழாய் பைப் மீது ஏறிய விவேக் ராஜ், அங்கிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். உடனே அவரை நெருங்கிய போலீசார், நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து விவேக் ராஜை கைது செய்தனர். விஷாலையும் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடும்போது பள்ளத்தில் விழுந்ததில் விவேக் ராஜுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கட்டு போடப்பட்டது.

ரௌடிகள் கலக்கம்

ரௌடிகள் கலக்கம்

தாம்பரம் பகுதியில், எதிரிகளை குறிவைத்து கொடூர திட்டம் போட்ட ரௌடிகள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி கைது நடவடிக்கையால், அப்பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் பெரும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+