குப்பையில் ஜொலித்த தங்கசெயின்.. மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்த செயல்.. சென்னையில் நெகிழ்ச்சி
சென்னை: சென்னை அடையாறில் குப்பை தொட்டியில் ஜொலிஜொலித்த தங்க செயினை தூய்மை பணியாளர் எடுத்து தானே வைத்து கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழ்மையிலும் கூட நேர்மையாக தங்கசெயினுக்கு ஆசைப்படாத அந்த தூய்மை பணியாளருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பசேர் நிறுவனம் சார்பில் பாலு என்பவரும் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

பாலு தூய்மை பணியாளராகவும், பேட்டரி கார் டிரைவராகவும் செயல்பட்டு வருகிறார். தினமும் காலையில் பேட்டரி கார்களில் வலம் வந்து குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை சேகரித்து செல்லும் பணியை பாலு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று காலையில் சென்னை அடையாரில் உள்ள பரமேஸ்வரி நகர் பகுதியில் பாலு குப்பைகளை சேகரிக்க சென்றார். அப்போது குப்பை தொட்டியில் இருந்த குப்பைகளை அவர் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது குப்பைக்கு மத்தியில் தங்க செயின் ஒன்று ஜொலிஜொலித்தது. இதனை பார்த்து பாலு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்த தங்கசங்கிலியை கையில் எடுத்தார் பாலு. அதுமட்டுமின்றி வீட்டு குப்பையுடன் தங்க சங்கிலி விழுந்து கிடந்து இருக்கலாம். அதனை அவர்கள் பாராமல் தெருவோரா குப்பை தொட்டியில் வந்து கொட்டி இருக்கலாம் என்று நினைத்தார். இதையடுத்து அவர் அருகே உள்ள வீடுகளுக்கு சென்று தங்கசெயின் பற்றி கேட்டார்.

அப்போது அடையாறு பரமேஸ்வரி நகரில் வசித்து வரும் காமாட்சி சந்தானம் என்பவரின் வீட்டில் இருந்த தங்க செயின் தான் அது என்பது தெரியவந்தது. அதோடு பாலு நினைத்தபடியே அந்த தங்கசெயின் குப்பையில் விழுந்து கிடப்பதை காமாட்சி சந்தானம் பாராமல் வெளியே உள்ள குப்பை தொட்டியில் கொட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்க சங்கிலியை பாலு காமாட்சி சந்தானத்திடம் ஒப்படைத்தார்.

அந்த தங்க செயினின் மதிப்பு என்பது ரூ.1.65 லட்சமாகும். மிஸ்ஸான தங்க செயின் திரும்ப கிடைத்ததால் காமாட்சி சந்தானம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். மேலும் தூய்மை பணியாளர் பாலுவை அவர் பாராட்டினார். பாலு ஏழ்மை நிலையில் தூய்மை பணியாளராக இருந்தும் கூட குப்பையில் கிடைத்த ரூ.1.65 லட்சம் மதிப்பிலான தங்க செயின் மீது ஆசை கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைத்ததற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications