சென்னையில் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரம்.. மும்பை சம்பவம் எதிரொலியால் ஆக்ஷன்
சென்னை: மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிஆ மாநிலம் மும்பையில் கடந்த 13ஆம் தேதி புழுதி புயல் வீசியது. இதில் மும்பை மாநகரின், காட்கோபர் செட்டாநகர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர ராட்சத விளம்பர பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட 16 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மும்பை மாநகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த விளம்பரப் பலகை, மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரியவந்தது. விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே என்பவரை ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மணிக்கு 50 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. தற்போது உள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிகளை மீறி வைக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும், குறிப்பாக சாலைகள், பெட்ரோல் பங்க், கல்வி நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்ற வேண்டும் என்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக அதிகாரிகள், பேனர்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இதுவரை மொத்தம் 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்ற சிறிய விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications