சாலையில் தேங்கிய மழைநீர்... நிர்மலாவை டென்ஷனாக்கிய மாநகராட்சி நிர்வாகம்
Recommended Video
சென்னை: பாஜகவின் சங்கல்ப யாத்ராவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிலையில், சாலையில் தேங்கி நின்ற மழைநீரை சென்னை மாநகராட்சி அகற்றாத விவகாரம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவைக்கவில்லை என நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிந்துகொண்டாராம்.
மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவது தெரிந்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏன் இப்படி அசட்டையாக செயல்பட்டது எனத் தெரியவில்லை.

முப்பெரும் விழா
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பாதயாத்திரை நிறைவு விழா, வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாள் விழா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா தமிழக பாஜக சார்பில் கடந்த 31-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பாஜகவினர் அந்த நிகழ்ச்சியை நடத்தியதில், சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

தேங்கிய மழைநீர்
கடந்த 30-ம் தேதி இரவு சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதில் பாஜகவின் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்ற ஷெனாய் நகரும் அடக்கம். புதன்கிழமை இரவு பெய்த மழையால் வியாழக்கிழமை காலை ஷெனாய் நகர் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது.

கோபம்
சங்கல்ப யாத்ராவில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைகளில் தேங்கி நின்ற மழை நீரை பார்த்தவுடன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஏன் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, இது பற்றி அவர்களிடம் முறையிட்டு ஏன் நீங்கள் முறையிடவில்லை என நிர்வாகிகளிடம் கடுகடுத்தாராம்.

நடிகை கவுதமி
நடிகை கவுதமி பாஜகவின் சங்கல்ப யாத்ராவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது அனைவரின் புருவத்தை உயரச்செய்தது. நிர்மலா சீதாராமனுக்காக நடிகை கவுதமி தாமாக முன்வந்து அந்த பாதயாத்திரை நிகழ்வில் பங்கேற்றாராம்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications