ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சை பாடல்.. இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பியவருக்கு ஜாமீன்
சென்னை: ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சை பாடல் பாடிய இசைவாணிக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாமி ஐயப்பனை பற்றியும், ஐயப்பனை வழிபடும் பக்தர்களின் விரதம் குறித்தும், ஐயப்பனின் மகிமை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக கானா பாடகி இசைவாணிக்கு எதிரான சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

இது தொடர்பாக இசைவாணி அளித்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன், ஜோதிநாதன், அழகு பிரகாஷ்பதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
எதிர்காலத்தில் சாதி ரீதியாகவோ, பெண்களுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் என்று உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இசைவாணியின் பாடல் சர்ச்சையாக வெடித்தது. 'ஐயம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தா என்னப்பா?' என்கிற வரியில் இசைவானி சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியிருந்தார். இருப்பினும் கடந்த ஆண்டு திடீரென இந்த பாட்டு சர்ச்சையாக வெடித்தது. இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் இசைவாணியை கைது செய்ய வேண்டும், இந்து மதத்தை அவர் புண்படுத்திவிட்டார் என்று கூறி காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர்.
இயக்குநர் மோகன்ஜி, பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தியிருந்தனர். இதற்கிடையில்தான் இசைவாணி மீது சோஷியல் மீடியாக்களில் ஆபாச தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கின. தன் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் இசைவாணி காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில்தான் அவதூறு பரப்பியதாக சிலரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications