கொரோனா ஒட்டிக்குமே என்றெல்லாம் கவலையில்லை.. வீட்டிற்குள் 4 பேர் செய்த பகீர் காரியம்.. மிரண்ட போலீஸ்
தொற்று பாதித்த தொழிலதிபர்களிடம் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது
சென்னை: கொரோனா வந்து ஒட்டிக்குமே என்றெல்லாம் பார்க்கவில்லை.. தனிமைப்படுத்தி கொண்டிருந்த ஒரு தொழிலதிபரை குடும்பத்தோடு கயிறால் கட்டிப்போட்டுவிட்டு 250 சவரன் நகையை அள்ளி கொண்டு போயுள்ளது ஒரு மர்ம கும்பல்!
செனைனை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் நூரூல் யாகூப்.. 70 வயதாகிறது.. இவர் ஒரு தொழிலதிபர்.. மனைவி பெயர் ஹனிஷா.. 4 பேர் கொண்ட குடும்பமாக இவர்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்த 4 பேருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது... அதனால், ஒரு வாரத்திற்கும் மேலாக 4 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர்... அதனால், இந்த குடும்பமே வெளியே வராமல் இருந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, வீட்டில் எல்லாரும் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.. அப்போது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்துள்ளது.. 4 பேருமே முகமூடி அணிந்திருந்தனர்.. அவர்கள் கையில் கத்தி இருந்தது.. பிறகு திடுதிப்பென்று நுழைந்த அவர்கள், நூரூல் யாகூப் உட்பட 4 பேரையும் ஒரு பெரிய கயிறால் கட்டி போட்டது.. சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு, ரூமில் இருந்த பீரோவை திறந்து 250 சவரன் தங்க நகைகளை அள்ளி கொண்டனர்.. பிறகு 1 லட்சம் ரூபாய் இருந்தது.. அதையும் எடுத்து கொண்டு, கிளம்பியது.
பிறகு வீட்டை விட்டு செல்லும்போதுதான், ஒருவேளை போலீசுக்கு சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து, அவர்கள் வைத்திருந்த எல்லா செல்போன்களையும் பறித்து கொண்டது.. அதேமாதிரி வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரையும் ஓட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
கயிறு கட்டப்பட்டு விட்டதால், 4 பேராலும் உடனே விடுவித்து கொள்ள முடியவில்லை.. மிகுந்த சிரமத்துடன் அந்த கயிற்றை அவிழ்த்து கொண்டு, அதன்பிறகுதான் பாண்டி பஜார் போலீசாருக்கு வந்து விஷயத்தை சொன்னார்.. வீட்டில் எல்லாருக்கும் கொரோனா என்பதால், போலீசார், கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குள் செல்லாமல் நூரூல் யாகூப்பிடம் முறைப்படி புகார் பெற்றனர். அதனடிப்படையில் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போது, யாகூப் வீட்டில் சொந்தக்காரர் ஒருவர் தங்கியிருந்தாராம்.. அவர் பெயர் மொய்தீன்.. அவர்மீதுதான் சந்தேகம் இருப்பதாக நூரூல் தெரிவித்துள்ளார். எனினும் இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பா என்றும் விசாரணை நடக்கிறது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. வீட்டில் 4 பேருக்குமே தொற்று உள்ள நிலையில், வந்த 4 பேருக்குமே தொற்று பரவியிருக்கும் என்று தெரிகிறது.. வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.. பணத்துக்கு ஆசைப்பட்டு நோயை வாங்கி கொண்டு சென்றுள்ளனர்!












Click it and Unblock the Notifications