மாயாவதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து அவதூறு செய்தி! ஆங்கில நாளிதழ் ஆசிரியருக்கு சிறை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் தனியார் ஆங்கில நாளிதழ் ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து செய்தி வெளியாகி இருந்தது

அதில், சென்னையில் உள்ள கேங்ஸ்டர்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் இருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அப்போதைய ஆசிரியர் சுனில் நாயர், பத்திரிக்கையாளர் செல்வராஜ், வெளியீட்டாளர் நாராயணன் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி ஆனந்தன், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமலும் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தி வெளியிட்டுள்ளதாக வாதிட்டார்.
மேலும், இது தொடர்பாக தங்கள் தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 13 வது எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தி வெளியிட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறி, 3 பேருக்கும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் 3 பேருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். பின்னர், தங்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்கக் கோரி மூன்று பேர் தாக்கல் செய்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 3 பேருக்கும் ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications