சென்னையில் "சம்பவம்".. அர்த்தராத்திரி கூலாக போன "செல்வி".. அலறிய எண்ணூர்.. எப்படி இவ்ளோ தைரியம்?
சென்னை: 2வது கணவனும், 2வது மனைவியும் ஒன்றாக சேர்ந்து, ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. இப்ப அந்த 2வது மனைவி ஜெயிலுக்கு போய்விட்டார். என்ன நடந்தது?
எண்ணூர் வஉசி நகரை சேர்ந்தவர் சுப்பையா.. 56 வயதாகிறது.. வடசென்னை அனல் மின் நிலையத்தில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருபவர்.. இவரது மனைவி 25 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்..

சுப்பையா: இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 2 பேருக்குமே கல்யாணமாகி விட்டது. 2 பேருமே தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். எனவே, சுப்பையா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், செல்வி என்ற பெண் சுப்பையாவுக்கு அறிமுகமானார்.. 48 வயதாகிறது.. இவருக்கும் திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவரை பிரிந்து வாழ்கிறார். செல்விக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். சுப்பையாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், நெருக்கமான உறவாக மாறியது. 2 பேரும், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்..
நெருக்கம்: 2 பேருக்குமே தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கிறதாம்.. நைட் நேரத்தில் ஒன்றாகவே சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார்கள். அப்படித்தான் சம்பவத்தன்றும், இருவரும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர். அப்போது சுப்பையாவுக்கு போதை அதிகமாகிவிடவுடம், செல்வியை அசிங்கமாக திட்ட ஆரம்பித்துள்ளார்.. ஒருகட்டத்தில் கைநீட்டி செல்வியை அடித்துள்ளார்.. இதனால், ஆவேசமடைந்த செல்வி, சுப்பையாவை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதனால் சுப்பையா தூங்கும்வரை காத்திருந்தார்.. நடுராத்திரி சுப்பையாவின் கழுத்தை துணியால் நெரித்து கொன்றுவிட்டார். பிறகு, அதேபகுதியில் வசிக்கும் சுப்பையாவின் மகள் வீட்டிற்கு சென்ற செல்வி, "உன் அப்பா போதையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை இப்பதான் கீழே இறக்கிவைத்துவிட்டு வந்தேன்" என்று சொல்லி அழுதுள்ளார். அப்போது மணி விடிகாலை 3.
சந்தேகம்: இதைக்கேட்டு அதிர்ந்துபோன மகள் பதறியடித்து கொண்டு ஓடினார்.. செல்வியிடம் என்ன நடந்தது என்று உறவினர்கள் கேட்டதற்கு உளறி உளறி பதில் சொல்ல துவங்கினர். இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் எண்ணூர் போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் விரைந்து சென்று, சுப்பையா சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கு பிறகு செல்வியிடம் தீவிர விசாரணை நடந்தது.. சுப்பையா தன்னை ஆபாசமாக திட்டி அடித்ததால், அவரது கழுத்தை துணியால் நெரித்து கொன்று விட்டேன் என்று வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, செல்வியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
மதுபோதை: தண்ணி அடித்துவிட்டால், செல்வியை சுப்பையா ஆபாசமாக திட்ட ஆரம்பித்துவிடுவாராம். இதனால், இருவருக்குள்ளும் தகராறு வந்துள்ளது. ஆனால், செல்வி, போதைக்கு அடிமையானவராம். சம்பவத்தன்றும் சுப்பையா போதையில் திட்டியதால், அவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரது கழுத்தை துணியால் நெரித்து கொன்றாராம்.. இந்த சம்பவம் எண்ணூரில் பரபரப்பை தந்து வருகிறது.. தமிழ்நாட்டில், இந்த குடிபோதை இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ???
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications