கராத்தே பிறந்தநாள்... 3,000 பேருக்கு பிரியாணி விருந்து
சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனது பிறந்தநாளை கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு விமரிசையாக கொண்டாடினார்.
காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் திமுக மீது கடும் கோபத்தில் இருப்பது, அண்மைக்காலமாக அவர் அளிக்கும் பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் மூலம் தெளிவாக புரிகிறது. காங்கிரஸில் இருந்து தன்னை நீக்க வைத்தது திமுக தலைவர் ஸ்டாலின் என்பது அவரது குற்றச்சாட்டு. இதனால் தொடர்ந்து ஸ்டாலினுடன் கருத்துப்போர் நடத்திக்கொண்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலினை கோபப்படுத்தும் வகையில் எதிர் அறிக்கை வெளியிடுவது, ரஜினிதான் அடுத்த முதல்வர் எனக் கூறுவது இப்படி அறிக்கைப்போர் நடைபெற்று வரும் சூழலில், நேற்று தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி அசத்திவிட்டார் கராத்தே தியாகராஜன். சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லம் அருகே மேடை அமைத்து தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
மேலும், நிகழ்ச்சிக்கு நடிகர் ராதாரவி, திண்டிவனம் ராமமூர்த்தி , உள்ளிட்டோரை அழைத்து திமுகவை எரிச்சல் படுத்தும் வகையில் பேச வைத்தார். விழாவில் பேசிய ராதாரவி தனக்கே உரிய பாணியில், ரஜினி பின்னால் நிற்க தாம் தயார் என ஆரம்பித்து திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். இதேபோல், கராத்தே தியாகராஜன் போல் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமானவர் என்றும், அது கூட தலைமைக்கு புரியவில்லை எனவும் தெரிவித்தார்.
கராத்தே தியாகராஜனுக்கு வாழ்த்துச்சொல்ல திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தனக்கு வாழ்த்துச்சொல்ல வந்த அனைவருக்கு பிரியாணி விருந்து அளித்து வழியனுப்பி வைத்தார் கராத்தே தியாகராஜன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications