சேலம், கோவை, வேலூர் டூ சென்னை.. மூட்டை மூட்டையாக வந்திறங்கும் நிவாரண பொருட்கள்.. விறுவிறு பணி
சென்னை: அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், அடிப்படை வசதிகள்கூட சரியாக கிடைக்கவில்லை என்றும் சென்னைவாசிகளின் குமுறல் வெடித்துவரும் நிலையில், தமிழகத்தின் மாவட்ட நிர்வாகங்களிலிருந்து நிவாரண பொருட்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
சென்னையில் இன்னமும் நீர்வடியாத பகுதிகள் அதிகமாகவே உள்ளன.. மேற்கு தாம்பரத்தில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இன்னும் மழை நீர் வடியவில்லை.

வேளச்சேரி பகுதியிலும், வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்களால் வெளியே வர முடியவில்லை.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், உட்புற பகுதிகளில் வசிப்பவர்கள் இன்னமும் சிக்கி தவித்து வருகிறார்கள்..
முடிச்சூர் ஏரி நிரம்பி வழிந்து கொண்டிருப்பதால், குடியிருப்பு பகுதிகளையும் அது சூழ்ந்துள்ளது. முடிச்சூர் ஏரியை, அடிக்கடி தூர் வாரியிருந்தாலே, இப்படி தண்ணீர் தேங்காது என்று புலம்புகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
துரைப்பாக்கம்: மேற்கு தாம்பரம், தரமணி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது.. பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளிலிருந்து வெளியேறிய உபரிநீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது.
ஐடி அலுவலகம் அமைந்துள்ள தரமணி பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கேகே நகர் பாரதிதாசன் காலனி பகுதிகளிலும் குளம் போல் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.வட சென்னையில், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி மழைநீர் வடியவில்லை. இங்கு மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது.. துர்நாற்றம் வீசுகிறதாம்.. கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டதாம். இதனால், அந்த பகுதி மக்கள், அங்கு வந்த அரசு பஸ் கண்ணாடியை ஆத்திரத்தில் அடித்து நொறுக்கினார்கள்.
வளசரவாக்கம்: போயஸ் கார்டன் பகுதியிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.. வளசரவாக்கத்தில், இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது.. நிறைய இடங்களில் இன்னும் கரண்ட் வரவில்லை. மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை.. சாலைகளில் இன்னும் நீர் வடியாததால், போக்குவரத்தும் முழுமையாக செயல்பட முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
"சேப்பாக்கத்தில் 42 கோடி ரூபாய்க்கு கார் ரேஸ் போட்டிகளுக்கு சாலைகள் போடப்படுகிறது.. ஆனால், நிறைய இடங்களில் வடிநீர் வாய்க்கால்கள் சரியாக இல்லை.. மெழுகுவர்த்தி கூட 110 ரூபாய்க்கு விற்கிறார்கள்.. கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு போனை போட்டாலும் யாரும் எடுப்பதில்லை.. பால், தண்ணீர், பிரட் சரியாக கிடைக்கவில்லை" என்று புலம்புகிறார்கள் மக்கள்.
தாம்பரம்: இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. தாம்பரம் பகுதிகளில் மழையால் பாதித்த சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தவிர, மாவட்டங்களிலிருந்து நிவாரண பொருட்களும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.. சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஆவின் பால் பவுடர், வாட்டர் பாட்டில், பிரட், பிஸ்கட், ஹெல்த் டிரிங் போன்ற உணவுப்பொருட்கள் அடங்கிய 2,000 எண்ணிக்கையிலான நிவாரணத் தொகுப்பை சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் அட்டைப்பெட்டிகளில் முறையாக அடுக்கி அனுப்பும் பணியினை நேற்றிரவு இரவு முழுவதும் வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
பெட்ஷீட்: அதேபோல, அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், எண்ணெய், நாப்கின், கேண்டில், பிரஷ், பேஸ்ட், பால் பவுடர், பிளேட், பிஸ்கட் பாக்கெட், பெட்ஷீட், டெட்டால், கொசுவத்திச் சுருள், டம்ளர், பாத்திரங்கள், சாரி, வேஷ்டி, குழந்தைகளுக்கான நாப்கின், தண்ணீர் பாட்டில், பக்கெட், தலையணை, டப், குடம் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பிளேட்டுகள், ஹார்லிக்ஸ், பிரட் மற்றும் பல பொருட்கள் பல நூறு கணக்கான கிலோக்களில் கோவை மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் நிவாரண பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன.. இதைத்தவிர, கட்சி வாரியாகவும், பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்குமே இன்று இரவுக்குள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications