சென்னையில் 39 சாலைகளில் மட்டுமே இப்போது மழைநீர்.. அதும் கொஞ்சூண்டு.. தலைமை செயலர் பரபர பேட்டி!
சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை பொழியச் செய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் குறித்தும் தலைமை செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது. 3,000 தூய்மைப் பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.
18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 343 இடங்களில் மழை தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 20.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 75 ஆயிரம் ரொட்டி பாக்கெட்டுகள், 4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 35 ஆயிரம் பால் பவுடர் பாக்கெட்டுகளும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும். இதுவரை 267 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 21,210 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.
மழைநீர் தேங்கியுள்ள இடங்களிலிருந்து நீரை அகற்ற வெளி மாநிலங்களில் இருந்து ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 400-க்கும் மேற்பட்ட சாலைகளில் 39 சாலைகளில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications