போதைப்பொருள் கும்பல் போனில் இருந்த நம்பர்.. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது.. 12 மணி நேரம் விசாரணை!
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான நம்பரை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான மாணவர்கள் கொடுத்த தகவலின்படி, மண்ணடி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைதாகினர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா மட்டுமின்றி அதிக விலை கொண்ட மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்களும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, யாரையெல்லாம் தொடர்புகொண்டு அவர்கள் கஞ்சா பொட்டலங்கள், மெத்தபெட்டமைன்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்தனர் என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, காட்டாங்கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னை தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரைக் கைது செய்து விசாரித்தனர்.
அவர்களது அறையில் கஞ்சா ஆயில் உட்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) போன் நம்பரும் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவருடன் மேலும் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக அலிகான் துக்ளக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் விஸ்காம் படித்த அலிகான் துக்ளக், தற்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி செய்து வருகிறார். அவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு, சினிமா துறையினர், கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பலருக்கும் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மீனா போதை மருந்து வைத்திருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மகனிடம் விசாரணை நடைபெற்று வருவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications