இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது ஏன்? சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டதாகவும் அவர் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த இரு நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில் அங்கு பணம் செலவு செய்ய முடியாமல் விக்னேஷை டிஸ்சார்ஜ் செய்துக் கொண்டனர்.

இதையடுத்து அவரை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எமர்ஜென்சியில் சேர்க்கப்பட்டும் விக்னேஷுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் எமர்ஜென்சியில் மருத்துவர்களே இல்லை என்றும்
உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் "இளைஞர் விக்னேஷ் கடைசி நேரத்தில் கிண்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. எமர்ஜென்சியில் மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக" தெரிவித்துள்ளது. இறந்த விக்னேஷுக்கு மனைவியும் 5 அல்லது 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications