இப்படியுமா செய்வாங்க.. ஏர்டெல்லுக்கு விபூதி அடித்த கும்பல்.. கிண்டியில் போய் பார்த்தால் திகைப்பு
சென்னை: சென்னை கிண்டியில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு நிறுவனத்தை சிலர் நடத்தி, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக ஏர்டல் நிறுவனம் மற்றும மத்திய உளவுத்துறையினர் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த சோதனை நடத்தி சட்டவிரோத தொலைபேசி அமைப்பின் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பத்திரிக்கை தகவல் பணியகம் (Press Information Bureau) தமிழ்நாடு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தொலைத்தொடர்புத் துறை, தமிழ்நாடு எல்எஸ்ஏ, மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல் துறை, ஏர்டெல் தமிழ்நாடு ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவினர் மத்திய உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சென்னை கிண்டியில் சந்தேகத்திற்கு உரிய இடத்தில் சோதனை செய்தனர்.

அங்கு சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பைக் கண்டுபிடித்து உள்ளனர்.உரிமம் பெற்ற சர்வதேச நீண்ட தூர ஆபரேட்டர்கள் (ஐ.எல்.டி.ஓ) நெட்வொர்க்கைத் தவிர்த்து, சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக சந்தாதாரர் அடையாள தொகுதி சிம் பாக்ஸ் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர், எஃப்.டி.டி.எச் ரூட்டர் ஆகியவற்றைக் கொண்டு சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது
இத்தகைய சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும், அரசு கருவூலத்திற்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத தொலைபேசி அமைப்பின் உபகரணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிம் கேட்வேக்களின் எண்ணிக்கையாக, மேக் - டின்ஸ்டார், திறன்- 32/16 சிம் போர்ட்கள் - 4,250 பயன்படுத்தப்பட்ட ஏர்டெல் சிம்கள், எஃப்.டிடி.எச் ரூட்டர் - 1, வைஃபை சிம் ரூட்டர் - 1 மேலும் பல சிம் கார்டுகள் மற்றும் யுபிஎஸ் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இது போன்ற சட்ட விரோத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏர்டெல் தமிழ்நாடு அளித்த புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்களே உள்ளூர் சிஎல்ஐ அல்லது தங்கள் தொலைபேசியில் எந்த எண்ணும் காட்டப்படாத சர்வதேச அழைப்பைப் பெறுவது குறித்து 1800 110 420 அல்லது 1963 என்ற கட்டணம் இல்லா எண்ணில் பொதுமக்கள் தொலைத்தொடர்புத் துறையின் அழைப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications