Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க மேல தப்பு இல்லன்னா நிரூபியுங்க.. செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம்! நீதிபதி அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அதில் அமலாக்கத் துறை தரப்பும் மேகலா தரப்பும் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

Chennai HC 3rd judge says that Senthil Balaji shoul abide by law

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்த போது குறுக்கிட்ட நீதிபதி காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும். அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில் கொள்ளக் கூடாது என கோர முடியாது என்றார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்த துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி கைதின் போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருக்கிறார் என்றார்.

கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோர முடியும் எனவும், மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது எனவும் குறிப்பிட்ட துஷார் மேத்தா, பொதுவாக அனைவரது இதயத்திலும் 40 சதவீத அடைப்பு இருக்கும் எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் ஒத்தி வைத்தார். இன்றைய தினம் இந்த வழக்கில் கபில் சிபல் வாதம் நடந்தது. இதையடுத்து இன்றைய தினமே இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மீதான இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டத்திற்குட்பட்டவர்தான். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த தடையையும் கோர முடியாது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+