சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான 8 பிஎஃப்ஐ நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த எட்டு நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை செய்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. சோதனை செய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், சென்னை, மதுரை, கடலூரை சேர்ந்த 13 பேரில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பரக்கத்துல்லாஹ், மாநில பேச்சாளர் அகமது இட்ரிஸ், முகமது அபுதாகிர், காலித் முகமது, சையது இசாக், காஜா மொகைதீன், யாசர் அராபத், பயாஸ் அஹ்மத் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து எட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் T.மோகன், ஐ.அப்துல் பாஷித், வழக்கறிஞர் ஏ.ராஜா முகமது ஆகியோர் ஆஜராகி, சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லாத நிலையிலும், தாங்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும், யூகத்தின் அடிப்படையிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாதிட்டனர். கைது செய்யப்பட்டு ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும், உடல்நிலையையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். விஷன் இந்தியா 2047 என்கிற அபாயகரமான நோக்கத்துடன் செயல்பட்டதாலேயே பி.எஃப்.ஐ. அமைப்பை மத்திய அரசு தடை செய்ததாகவும், மனுதாரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, அவற்றை நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்ததுடன், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீதிபதிகள் எட்டு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஒரு லட்ச ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளவும், அதன்பின்னர் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications